VAPA தொலைக்காட்சியின் தலைமை அதிகாரியாக ஜனகன் நியமனம்

Published By: Nanthini

04 Mar, 2023 | 04:14 PM
image

கொழும்பில் அமைந்துள்ள இலங்கை கட்புல, அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தின் தொலைக்காட்சியான 'வாப்பா' (Visual and Performing Arts) தொலைக்காட்சியின் தலைமை அதிகாரியாக கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். 

இலங்கை கட்புல, அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ரோஹன P.மஹாலியனாராச்சி, வி.ஜனகன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை (3) இந்த நியமனத்துக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

வாப்பா தொலைக்காட்சி இலங்கை கட்புல, அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தினால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 

இத்தொலைக்காட்சியில் கல்வி மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தயாரித்து ஒளிபரப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சிகளை மேம்படுத்தும், வர்த்தக ரீதியில் வெற்றி பெறச்செய்யும் நோக்கத்துடன் கலாநிதி ஜனகன் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக உப வேந்தரான பேராசிரியர் ரோஹன P.மஹாலியனாராச்சி கூறியுள்ளார்.

VAPA தொலைக்காட்சி Peo TVஇன் தளத்தில் 123 என்ற அலைவரிசையினூடாக ஒளிபரப்பாகிறது. அதேவேளை மிக விரைவில் Dialog அலைவரிசையூடாகவும் ஒளிபரப்பாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இயங்கும் ஊடகங்களும், சமூக வலைத்தள ஊடகங்களும் பெரும்பாலும் இனவாதம் மற்றும் மதவாதம் கொண்டவையாகவே நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. 

சமூக வலைத்தளங்களில் நிகழ்ச்சிகளை செய்யும் பலர் மதம், இனங்களை புண்படுத்தக்கூடிய எதிர்மறையான நிகழ்ச்சிகளினை வழங்குவதை அவதானிக்க முடிகிறது.

ஆயினும், எமது VAPA தொலைக்காட்சியில் அவ்வாறன்றி, பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இனம், மதமின்றி எவ்வாறு ஒருமைப்பாட்டுடன் ஒருசேர கல்வி கற்கிறார்களோ, அதேபோன்று தேசிய ஒருமைப்பாடு மிகுந்த நிகழ்ச்சிகள் வழங்கப்படவுள்ளதாக கலாநிதி ஜனகன் கூறியுள்ளார்.

மேலும் அவர், வழமையான தொலைக்காட்சிகளிலிருந்து மாறுபட்டு, இன, மத வேறுபாடுகளின்றி 'அனைவரும் இலங்கையர்கள்' என்ற குறிக்கோளுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் பயன் தரும் பல்‍வேறு நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படவுள்ளதாக கூறினார்.

முக்கியமாக, பல்கலைக்கழக மாணவர்களது திறமையினை வெளிக்கொண்டுவரும் வகையில் இந்த தொலைக்காட்சி பயன்படுத்தப்படும். 

அதேவேளை, இலங்கை கட்புல, அரங்கேற்ற கலைகள் பல்கலைக்கழகத்தின் குறிப்பிட்ட கல்வி கற்கைநெறிகளை 'வாப்பா' தொலைக்காட்சி நிகழ்ச்சிகளினூடாக கற்பதற்கான சேவை விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

வாப்பா தொலைக்காட்சி எதிர்காலத்தில் ஏனைய ஊடகங்களை போன்று அனைவருக்குமான தொலைக்காட்சி சேவையாக அனைவராலும் விரும்பிப் பார்க்கப்படும் தொலைக்காட்சி சேவையாக மாற்றப்படும் எனவும் ஜனகன் நம்பிக்கை வெளியிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அல் - ஹாபிழ் அஸ்மி சாலியின்...

2023-05-29 11:35:51
news-image

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2023

2023-05-29 11:33:01
news-image

புதிய அலை கலை வட்ட இலக்கியப்...

2023-05-29 11:06:54
news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35