மருந்து இல்லையெனக் கூறினால் பொலிஸாரிடம் முறைப்பாடளியுங்கள் - இலங்கை வைத்திய சங்கம்

Published By: Digital Desk 5

04 Mar, 2023 | 05:24 PM
image

(எம்.மனோசித்ரா)

அரச வைத்தியசாலைகள் அல்லது அரச மருந்தகங்களில் செல்லும் நோயாளர்களுக்கு அங்கு மருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டால் , அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு வலியுறுத்தியுள்ள இலங்கை வைத்திய சங்கம் , அதற்கு சட்ட ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை வைத்திய சங்கத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பெப்ரவரி 15ஆம் திகதி நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது. 

இதற்கான பதிலைப் பெற்றுக் கொள்வதற்காக சுகாதார அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பில் வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவிக்கையில்,

சுகாதார அமைச்சின் அசமந்த போக்கின் காரணமாகவே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எமது முறைப்பாட்டில் பிரதிவாதிகளாப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள சுகாதார அமைச்சின் செயலாளரோ அல்லது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமோ விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை.

எனவே எந்தவொரு நோயாளியும் அரச வைத்தியசாலைகள் அல்லது மருந்தகங்களுக்கு சென்று அங்கு மருந்து இல்லை எனத் தெரிவிக்கப்பட்டால் அது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இது தொடர்பில் சட்ட உத்துழைப்பினை வழங்குவதற்கும் நீதிமன்றத்தை நாடுவதற்கும் நாம் தயாராக இருக்கின்றோம் என்றார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம ,இது தொடர்பில் சுமார் ஓராண்டுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதியிடமும் கலந்துரையாடியிருந்தோம். அது தொடர்பில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமையின் காரணமாக இன்று இவ்வாறு பாரதூரமான மருந்து தட்டுப்பாட்டினை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மருத்துவ சேவை நிறுவனங்களில் தற்போது சுமார் 150 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலைமை மேலும் பாரதூரமடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எமது அரசாங்கத்தின் தொடர்ச்சியே அநுரவின் வரவு...

2025-02-18 17:20:44
news-image

மீள் குடியேற்றத்துக்கு ஒதுக்கிய 5 ஆயிரம்...

2025-02-18 19:03:26
news-image

வடக்குக்கு தவிர ஏனைய மாகாணங்களுக்கு பாரிய...

2025-02-18 19:05:16
news-image

வெளிநாட்டு உணவகங்களின் வருகை பாராம்பரிய உணவுகளை...

2025-02-18 20:12:13
news-image

மக்களின் வரிப்பணம் வீண்விரயமின்றி தேசிய அபிவிருத்திக்காகப்...

2025-02-18 17:37:46
news-image

ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப இவ் வருடத்துக்குள்...

2025-02-18 19:08:06
news-image

அரசாங்கத்துக்கு ஏற்றாற் போல எம்மால் அரசியல்...

2025-02-18 17:25:30
news-image

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த அபேசேகர...

2025-02-18 20:36:03
news-image

9 வருடங்களுக்கு பின்னரே அரச ஊழியர்களின்...

2025-02-18 19:08:47
news-image

பெற்றோரின் மீது சுமத்தப்பட்டுள்ள பிள்ளைகளின் கல்வி...

2025-02-18 17:27:45
news-image

மன்னாரில் கனிய மணல் அகழ்வுக்கான கள...

2025-02-18 17:27:52
news-image

ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் சுகாதாரத் துறை...

2025-02-18 19:14:47