எம்மில் அனைவரும் தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும் தருணத்தில் அதாவது மூன்றாவது மாதத்திலிருந்து இதயத்துடிப்பு உண்டாகும். இவை தாயின் வயிற்றில் வளர்ந்து சிசுவாக பிரசவித்த பிறகு ஆயுள் முழுவதும் இடையறாது துடித்துக் கொண்டே இருக்கும். இந்த இதய துடிப்பு குறித்து நாம் பெரிதாக கவனம் கொள்வதில்லை.
ஆனால் எம்மில் சிலர், தங்களின் உடல் உறுப்புகளில் சதை துடிப்பு ஏற்பட்டால்.., அதனை உணரத் தொடங்குவதால் உடனடியாக கவலையடைகிறார்கள். பதட்டமடைகிறார்கள். மருத்துவரிடம் விரைந்து சென்று ஆலோசனையும் சிகிச்சையும் பெறுகிறார்கள்.
இந்த சதை துடிப்பானது மருத்துவ மொழியில் ஃபாஸிகுலேஷன் என வகைப்படுத்துகிறார்கள். இதில் பினைன் ஃபாஸிகுலேஷன் என்றும், மாலிங்நெட் ஃபாஸிகுலேஷன் என்றும் பிரித்து, அதற்குரிய சிகிச்சையை அளிக்கிறார்கள். பினைன் ஃபாஸிகுலேஷன் என்பது தீங்கற்ற சதை துடிப்பு பாதிப்பாகும்.
உங்களுடைய உடலில் பி12, விற்றமின் டி போன்ற ஊட்டச்சத்து குறைபாடு, கால்சிய சத்து குறைபாடு, டி ஹைட்ரேஷன் எனப்படும் நீர்ச்சத்து குறைபாடு ஆகிய காரணங்களாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
மேலும் வேறு சிலருக்கு தொடர்ச்சியாக புகைபிடித்தாலோ அல்லது நாளாந்தம் ஆறு அல்லது ஏழு முறைக்கு மேல் கோப்பி அருந்தினாலோ இத்தகைய சதை துடிப்பு பாதிப்பு ஏற்படக்கூடும். மன அழுத்தம், படபடப்பு ஆகியவற்றின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும்.
வேறு சிலருக்கு நரம்பியல் கோளாறு காரணமாகவும் இத்தகைய பாதிப்பு ஏற்படும். இதனை ரத்த பரிசோதனை, நரம்பு மண்டல இயக்க திறன் பரிசோதனை, உடலில் மின்னாற்றல் திறன் தொடர்பான பரிசோதனை... ஆகியவற்றை மேற்கொண்டு எதன் காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது என்பதனை துல்லியமாக அவதானிப்பார்கள்.
அதன் பிறகு மருத்துவர்கள் மருந்து மற்றும் மாத்திரைகள் மூலம் இதற்கான முதன்மையான நிவாரண சிகிச்சையை வழங்குவார்கள். இத்தகைய சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாகப் பின்பற்றினால், இத்தகைய பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள இயலும்.
டொக்டர் விக்னேஷ்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM