யாழ். பல்கலையில் மாணவர்களுக்கான ‘தொழிற்சந்தை 2023’

Published By: Nanthini

04 Mar, 2023 | 11:29 AM
image

‘தொழிற்சந்தை 2023’ (‘Career Fair 2023’) முதல் தடவையாக நேற்று வெள்ளிக்கிழமை (3) யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் நடைபெற்றது. 

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளக தொழில்சார் பயிற்சிகளை வழங்க முன்வரும் நிறுவனங்களை அடையாளம் காணும் நோக்குடனும், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப் பட்டதாரிகளுக்கான நிரந்தர, தற்காலிக முழுநேர மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்புகளை அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொடுக்கும் இலக்குடனும் இத்தொழிற்சந்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அறிமுகமானது. 

உலக வங்கியின் நிதியுதவியில் ‘மேன்மைப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி ஊடாக உயர்கல்வியை துரித வளர்ச்சிக்குட்படுத்துதல்’ (எகெட்) திட்டத்தின் உதவியில் இத்தொழிற்சந்தை முன்னெடுக்கப்பட்டது. 

நாடளாவிய ரீதியில் அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், சபைகள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், விருந்தோம்பல் துறையை சேர்ந்த நிறுவனங்கள், ஹோட்டல்கள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் பாடசாலைகள், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்துறையினர் என 65க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இத்தொழிற்சந்தையில் பங்கேற்றன.

‘தொழிற்சந்தை 2023’இன் தொடக்க விழாவில்  யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா பிரதம அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்துவைத்தார். 

இந்நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் எஸ். ரகுராம், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எம்.பிரதீபன், உலக வங்கியின் எகெட் நிகழ்ச்சித்திட்ட கலைப்பீட இணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எஸ்.கபிலன், எகெட் தொழில்வளப் பயிற்சிகளுக்கான கலைப்பீட இணைப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான எஸ்.சிவகாந்தன், ‘தொழிற்சந்தை 2023’க்கான வழிகாட்டுநரான சிரேஷ்ட விரிவுரையாளர் எல்.ரமணன், அரச சார்பற்ற நிறுவனங்கள் சார்பில் ‘சொண்ட்’ நிறுவனப் பணிப்பாளர் எஸ். செந்தூர்ராஜா ஆகியோரும் உரையாற்றினர். 

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தில் நான்காம், மூன்றாம் வருட சிறப்புக்கலை மற்றும் பொதுக்கலை பயிலும் மாணவர்களும், யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிறப்புக்கலை, பொதுக்கலை பட்டங்கள் பெற்று, வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பட்டதாரிகளும் நேரடிப் பயனாளிகளாக இந்த தொழிற்சந்தையில் இணைந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56