நுவரெலியா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூழியர்கள் போராட்டம்

Published By: Digital Desk 3

04 Mar, 2023 | 11:24 AM
image

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை வைத்தியர்கள், தாதிமார்கள், சிற்றூழியர்கள் என பலரும் இணைந்து பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து வைத்தியசாலை பிரதான நுழைவாயில் முன்பாக இன்று (04) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்  உடனடியாக மக்களுக்கு கிடைக்க வழி செய்ய வேண்டும், முறையற்ற நியமனத்தினை வழங்குவதை நிறுத்து, வாழ்வாதாரத்தினை அதிகரிக்கவும், வங்கியில் அதிகரித்த வட்டி வீதத்தினை குறைக்கவும், ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய், வான் உயரத்தில் பண வீக்கம் நடுவீதியில் உத்தியோகஸ்தர்கள் போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்தியவாறும், கோசங்களை எழுப்பியும் தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த போராட்டத்தினை அனைத்து சேவைகளையும் இடைநிறுத்தி பாரியளவில் முன்னெடுக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இப்போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணித்தியாலயம் வைத்தியசாலை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், நோயாளர்கள் சிரமத்துக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33