சம அளவில் தேசிய சுப்பர் லீக் இறுதி ஆட்டம்

Published By: Digital Desk 5

04 Mar, 2023 | 09:35 AM
image

(நெவில் அன்தனி)

தம்புளை அணிக்கும் காலி அணிக்கும் இடையில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தேசிய சுப்பர் லீக் 4 நாள் இறுதிப் போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் இருக்கிறது.

போட்டியின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (03) ஆட்ட நேர முடிவில் தம்புளை அதன் 2ஆவது இன்னிங்ஸில் 4 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன்படி 2ஆவது இன்னிங்ஸில் 6 விக்கெட்கள் மீதமிருக்க 177 ஓட்டங்களால் தம்புளை முன்னிலையில் இருக்கிறது.

போட்டியில் மேலும் 2 நாட்கள் இருப்பதால் எந்த அணியும் வெற்றிபெறலாம் என்ற நிலை இப்போதைக்கு தென்படுகிறது.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதலாவது இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 26 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த காலி அணி, சகல விக்கெட்களையும் இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

காலி அணி ஒரு கட்டத்தில் 6 விக்கெட்களை இழந்து 36 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தால் அவ்வணி 100 ஓட்டங்களை எட்டுமா என்ற சந்தேகம் நிலவியது.

ஆனால், பெத்தும் குமார 2 முக்கிய இணைப்பாட்டங்களில் பங்காற்றி காலி அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்தார்.

7ஆவது விக்கெட்டில் சுமிந்த லக்ஷானுடன் 82 ஓட்டங்களைப் பகிர்ந்த பெத்தும் குமார, 8ஆவது விக்கெட்டில் கவிஷ்க அஞ்சுலவுடன் மேலும் 57 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

பெத்தும் குமார 78 ஓட்டங்களையும் சுமிந்த லக்ஷான் 41 ஓட்டங்களையும் கவிஷ்க அஞ்சுல 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

தம்புளை பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க டி சில்வா 64 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லஹிரு சமரக்கோன் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொனால் தினுஷ 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் தம்புளை அணி 4 விக்கெட்களை இழந்து 116 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

சொனால் தினுஷ 51 ஓட்டங்களுடனும் அஷான் ப்ரியஞ்சன் 34 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருப்பதுடன் அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

பந்துவீச்சில் மொஹமத் ஷிராஜ் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

மூன்றாம் நாள் ஆட்டம் தொடரும்போது அவர்கள் இருவரும் தொடர்ந்தும் திறமையாகவும் பொறுமையாகவும் துடுப்பெடுத்தாடுவது அணியைப் பலப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். 

எனவே நாளைய  முதலாவது ஆட்ட நேர பகுதியில் இருவரும் விக்கெட்டை தக்கவைத்துக்கொண்டு துடுப்பெடுத்தாடினால் தம்புளை அணிக்கு அனுகூலமான முடிவு கிடைக்கும். அல்லது ஆட்டத்தில் திருப்பம் ஏற்படலாம்.

தம்புளை அதன் முதல் இன்னிங்ஸில் 248 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21