ஒவ்வொரு சிறுவர்களுக்காகவும் அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கின்ற மற்றும் பாரபட்சமற்ற விசாரணைகளுக்கான உரிமை

03 Mar, 2023 | 07:36 PM
image

சிறுவர்கள், குற்றவியல் நடவடிக்கைகளில் எதிராளிகள் அல்லது சாட்சிகளாக இருத்தல், உடல் ரீதியான அல்லது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு இலக்காகுதல் மற்றும் சிவில் அல்லது நிருவாக வழக்குகளின் திறத்தவர்களாக இருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் சட்ட நடவடிக்கைகளுடன் சம்பந்தப்படுகின்றனர். 

சிலவேளை, இவ் வழக்குகளின் முடிவுகள் பிள்ளையின் வாழ்க்கை அமைப்பிலேயே மாற்றங்களை ஏற்படுத்திவிடும். குறுகிய காலத்தில் அவர்கள் விசாரணைக்கு முந்திய தடுப்புக்காவலில் வைக்கப்படுவதோடு தமது கல்வியைத் தொடரவிடாமல் தடுக்கப்படலாம். மேலும், அவர்களை வயதில் மூத்தவர்களுடன் தடுப்புக்காவலில் வைக்கும் போது வன்முறை மற்றும் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகலாம். அத்துடன், நீண்டகாலத்தில், தடுப்புக்காவல் மற்றும் வீட்டுப் பராமரிப்பில் இருக்கும் போது தமது குடும்ப உறுப்பினர்களுடனான வழமையான தொடர்பினையும் தமது சமூகத்தில் சாதாரண வாழ்க்கையில் மீண்டும் ஒருங்கிணைவதற்கான வாய்ப்பினையும் தவறவிடுகின்றனர்.

சிறுவர்கள் சட்டத்தினை மீறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டாலும், அனைத்துச் சிறுவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதையும் அவை திறம்பட அமுல்படுத்தப்படுவதையும் நீதி முறைமையில் உத்தரவாதப்படுத்துவது அவசியம். அந்த வகையில், சிறுவர்-நேய நீதி என்பது, வழக்கு நடவடிக்கைகளில் பங்கேற்று அவற்றை புரிந்துகொள்ளல், பிள்ளையின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு மதிப்பளித்தல், மேலும் நேர்மை மற்றும் கண்ணியம் பேணுதல் போன்ற அம்சங்களை உத்தரவாதப்படுத்தும் முறையான நடைமுறைகள் பேணப்பட வேண்டுமென்பதுடன், குறித்த வழக்கு நடவடிக்கைகள் இலகுவாக விளங்கக்கூடியனவாகவும், வயதிற்குப் பொருத்தமானவையாகவும், விரைவாகவும், அக்கறையுடன் கூடியனவாகவும், சிறுவர்களின் தேவைகள் மற்றும் உரிமைகளுடன் இயைபாக இருந்து அவற்றில் கவனம் செலுத்தக்கூடியனவாக இருத்தல் அவசியம். 

சிறுவர்-நேய நீதி முறைமையின் மிகவும் முக்கியமானவர்கள் துறைசார் நிபுணத்துவமிக்க, நம்பகமான சட்ட வல்லுநர்களாகும். 

இவ்வாறான சட்டத்துறை வல்லுநர்களுக்கு நீதித்துறை முறைமை தொடர்பாக சிறுவர்களின் அனுபவம் மற்றும் வழக்கின் முடிவு தொடர்பாக பெரும் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.

அவ்வாறே, சிறுவர் நேய நீதியை உறுதிப்படுத்துவதற்கு ஊடகங்கள் மற்றும் பொது மக்களுக்கு மிகவும் முக்கியமானதொரு வகிபாகத்தினை ஆற்ற முடியும். அந்த வகையில், ஊடக அறிக்கைகள் மற்றும் சமூக ஊடகங்களில் தகவல்கள் மற்றும் கருத்துக்களைப் பகிராது பிள்ளையின் நேர்மை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்கியும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் குற்றவியல் புலனாய்வு மற்றும் நீதியான விசாரணைக்கான உரிமையில் தலையீடுகளை மேற்கொள்ளாது தவிர்ந்துகொள்வதனூடாகவும் இப் பணியை செவ்வனே நிறைவேற்றலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நிபந்தனையற்ற நீதி...

2026-04-21 14:58:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் அரசியல்...

2026-04-21 14:50:48
news-image

'கஞ்சிபானை இம்ரான்' உடன் தொடர்புடைய முக்கிய...

2026-04-21 14:49:33
news-image

வவுனியாவில் டித்வா புயலினால் பகுதியளவில் சேதமடைந்த...

2026-04-21 14:49:11
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை 

2026-04-21 14:05:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : தற்போதைய...

2026-04-21 13:29:54
news-image

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர...

2026-04-21 13:03:48
news-image

“7 ஆண்டுகள் கடந்தும் கிடைக்காத நீதி!"...

2026-04-21 12:54:12
news-image

இன்றைய நாணய மாற்று விகிதங்கள்

2026-04-21 12:50:39
news-image

நீதியை நிலைநாட்டுவதில் அசமந்தப்போக்குடன் செயற்பட்டால் சர்வதேச...

2026-04-21 13:05:57
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் 7ஆவது...

2026-04-21 12:15:57
news-image

மட்டக்களப்பில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

2026-04-21 12:12:12