யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான தொழிற் சந்தை 2023

Published By: Digital Desk 5

03 Mar, 2023 | 04:59 PM
image

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கான உள்ளகத் தொழில்சார் பயிற்சிகளை வழங்கமுன்வரும் நிறுவனங்களை அடையாளங்காணும் நோக்குடனும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப் பட்டதாரிகளுக்கான நிரந்தரமான மற்றும் தற்காலிக, முழுநேர மற்றும் பகுதிநேர வேலைவாய்ப்புக்களுக்கான வாய்ப்புக்களை அரச மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பெற்றுக்கொடுக்கும் இலக்குடனும் முதற்தடவையாக ‘தொழிற் சந்தை 2023’ (‘Career Fair 2023’) இன்று வெள்ளிக்கிழமை (03) கலைப்பீடத்தில் நடைபெற்றது.

உலகவங்கியின் நிதியுதவியிலான ‘மேன்மைப்படுத்தல் மற்றும் அபிவிருத்தி ஊடாக உயர்கல்வியைத் துரித வளர்ச்சிக்குட்படுத்துதல்’ திட்டத்தின் உதவியில் இத்தொழிற்சந்தை முன்னெடுக்கப்பட்டது.

நாடாளவியரீதியில் 85ற்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கும் இத்தொழிற்சந்தையில் அமைச்சுக்கள், அரச திணைக்களங்கள், சபைகள், தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள், விருந்தோம்பல் துறையைச் சேர்ந்த நிறுவனங்கள், ஹோட்டல்கள், உயர்கல்வி நிறுவனங்கள், தனியார் பாடசாலைகள், உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்துறையினர் எனப் பல தரப்பினரும் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது.

காலை 9 மணிக்கு ஆரம்பமான ‘தொழிற் சந்தை 2023’இன் தொடக்க விழாவில், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்துவைத்துடன் யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி சி.ரகுராம், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கலைப்பீடத்தில் நான்காம் வருடம் மற்றும் மூன்றாம் வருட சிறப்புக்கலை மற்றும் பொதுக்கலை பயிலும் மாணவர்களும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிறப்புக்கலை, பொதுக்கலைப் பட்டங்கள் பெற்று, வேலைவாய்ப்புக்களுக்காகக் காத்திருக்கும் பட்டதாரிகளும் நேரடிப் பயனாளிகளாக இணைந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35