நான் ஏன் முகநூல் இன்ஸ்டாவிலிருந்து வெளியேறினேன்?

Published By: Rajeeban

03 Mar, 2023 | 04:59 PM
image

2017 இல் முகநூலின் சொந்த ஆராய்ச்சிகளே முகநூல் பொதுமக்களின் மனோநலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடுமா என பகிரங்கமாக கேள்வியெழுப்பின. 

அதுவே என்னை இறுதியாக சோர்வடையச்செய்த விடயம்.

பலமாதங்களாகவே நான் சமூக ஊடகங்களில் இருந்து விட்டுவிடுதலையாகவேண்டுமா என்பது குறித்து சிந்தித்து வந்தேன்.

ஆனால் இந்த சிறிய செய்தி என்னை தெளிவான முடிவை எடுக்க தூண்டியது.

இதற்கான காரணம் மிகவும் இலகுவானது. சமூக ஊடகங்களில் இருந்து விடுதலையாவது உங்களின் உள ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துகின்றது என்பது குறித்து பல ஆய்வுகள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொன்றையும் நான் நிதானமாக வரிக்குவரி வாசிப்பேன் மனதில் நிறுத்திக் கொள்வேன்.ஆனால் அவ்வாறு செய்யும் ஒவ்வொரு முறையும் அதன் விளைவுகள் பற்றி மேலும் மேலும் மனமுடைந்தேன். அதன் விளைவுகள் குறித்த சந்தேகம் மேலும் மேலும் அதிகரித்தது.

அதேவேளை சமூக ஊடகங்களை நான் பயன்படுத்தும் விதமும் அதிகரித்தது.

நான் ஒருபோதும் நினைத்திராத போதிலும் அது திடீரென எனது இருப்பின் அங்கமாக மாறியது.

ஆகவே முகநூல் ஆய்வாளர்கள் தெரிவித்திருப்பதை வாசித்த பின்னர் சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறுவது மாத்திரமே நான் செய்யக்கூடிய ஒரேயொரு விடயம் என நான் தீர்மானித்தேன்.

நான் முகநூலில் இருந்து மாத்திரம் வெளியேறவில்லை இன்ஸ்டகிராமிலிருந்தும் வெளியேறினேன்.

எனது இந்த முடிவு சிறப்பானதாக காணப்பட்டமைக்கான காரணங்கள்

1.சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறுவதை தவிர்க்கவேண்டிய காரணங்கள் எவையும் இருக்கவில்லை.'

நான் ஒரு பிரீலான்சர் என்பதை நான் முதலில் உங்களிற்கு தெரிவிக்கவேண்டும். நான் வேலை செய்யாவிட்டால் எனக்கு வருமானம் இல்லை.

இதன் காரணமாக முகநூலும் இன்ஸ்டாவும் எனது வாழ்க்கையில் எதிர்மறையான தாக்கத்தை  ஏற்படுத்திக்கொண்டிருந்தன என தெரிவிக்கலாம்.

எனது வருமானத்திலும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தன என்பதை துணிச்சலுடன் தெரிவிக்கின்றேன்.

எனது வாழ்க்கை வழமையாக இவ்வாறானதாக காணப்பட்டது.

தேநீர், மின்னஞ்சல்களை பார்ப்பது. எழுதுவது முகநூலை பார்ப்பது தொலைபேசியில் உரையாடுவது இன்ஸ்டாவை பார்ப்பது தொடர்ந்து எழுவது முகநூலை பார்ப்பது.

ஒவ்வொரு வேலை தொடர்பான பணியும் சமூக ஊடகங்களின் வடிவத்தில் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது அந்த சமூக ஊடகங்கள் இல்லாததால் அவற்றை பார்க்கவேண்டியதில்லை. இதனால் நான் முன்னரைவிட அதிக வேலை செய்கின்றேன். முன்னரை விட அதிக மின்னஞ்சல்களிற்கு பதில் அளிக்கின்றேன் அதிகளவு வாடிக்கையாளர்களுடன் பேசுகின்றேன்.

எனினும் சமூக ஊடகங்களை தேடி போகவேண்டும் என்ற உணர்வு அவ்வப்போது வருகின்றது இது நான் அவற்றிற்கு அடிமையாகிவிட்டேன் என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.

2. ஏனையவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பது பற்றி தற்போது நான் கவலைப்படுவதில்லை.

ஒரு பட்டனை அழுத்துவதன் மூலம் எனது குழுவில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை பார்க்ககூடிய சூழ்நிலையில் அவ்வேளை காணப்பட்டதால் நான் அது குறித்து அதிகம் சிந்தித்தேன் என்பதை சொல்ல வெட்கப்படுகின்றேன்.

எனது நண்பர்கள் அல்லது நண்பர்களின் நண்பர்கள் என்னை விட்டுவிட்டு வெளியே  மகிழ்ச்சியாக காணப்படுவதை பார்த்து நான் மன அழுத்தத்திற்கு ஆளானேன்.

அவர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தாலும் சினிமா தியெட்டரிலும் காணப்பட்டாலும் நான் ஏன் அவர்கள் பட்டியலில் இல்லை என நினைத்து கவலைப்பட்டேன் பதட்டமடைந்தேன்.

அறியாமை என்பது வரம் நீங்கள் அவர்களுடன் இல்லாதபோது அவர்கள் என்ன செய்கின்றார்கள் என அறிந்துகொள்வது அது குறித்து சிந்திப்பது பயனற்ற விடயம்.

நான் அறிந்தவர்கள் எனக்கு தெரிந்தவர்கள் என்ன செய்கின்றார்கள் தற்போது எனக்கு தெரியாது இதன் காரணமாக என்னால் எனது வேலைகளை செய்ய முடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21