'கஸ்டடி' படத்தில் அரவிந்த் சாமியின் கேரக்டர் லுக் வெளியீடு

Published By: Ponmalar

03 Mar, 2023 | 04:35 PM
image

தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்கும் 'கஸ்டடி' எனும் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் அரவிந்த் சாமியின் கதாபாத்திரத் தோற்றப் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

நடிகரும், இயக்குநருமான வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் திரைப்படம் 'கஸ்டடி'. இதில் நாக சைதன்யா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்திருக்கிறார். இவர்களுடன் சரத்குமார், சம்பத்ராஜ், பிரியாமணி, பிரேம்ஜி அமரன், வெண்ணலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் அரவிந்த்சாமி, 'ராசு' என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருடைய தோற்றத்தை புகைப்படமாக படக் குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள். எஸ். ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு 'இசைஞானி' இளையராஜாவும், 'இளைய இசைஞானி' யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைக்கிறார்கள். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்ரீநிவாசா சில்வர் ஸ்கிரீன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசா சித்தூரி தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், நடிகை கீர்த்தி ஷெட்டியின் கேரக்டர் லுக் ஆகியவை வெளியாகி பெரும் எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்று வரும் நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெற்ற அரவிந்த் சுவாமியின் கேரக்டர் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே நடிகர் அரவிந்த் சாமி, 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு இந்த திரைப்படத்தில் அதிரடி வில்லனாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37