உலகை சுற்றி

Published By: Digital Desk 3

03 Mar, 2023 | 04:29 PM
image

அர்ஜென்டினாவில் காணாமல் போன 32 வயதான டியாகோ பாரியா என்ற இளைஞரின் உடல், சுறா ஒன்றின் வயற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  மீட்கப்பட்ட அவரது கை பாகத்திலிருந்த  'டட்டூ 'மூலம் அவர் டியாகோ பாரியா என உறவினர்கள் இனங்கண்டுள்ளனர். 

********

பிரிட்டனின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரதமர் ரிஷி சுனக்கின் புதிய பிரெக்சிட் ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்துள்ளார், பாராளுமன்றத்தில் அதற்கு வாக்களிப்பது மிகவும் கடினம் என்றும் கூறியுள்ளார் .

********* 

ரஷ்யாவிற்கு விமான தொழில்நுட்பத்தை சட்டவிரோதமாக அனுப்பியதாக சந்தேகத்தின்  பேரில் அமெரிக்காவின் கென்சாஸ் மாகாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின்குற்றம் நிரூபிக்கப்பட்டால், உரிமம் இல்லாமல் கட்டுப்பாட்டு பொருட்களை ஏற்றுமதிசெய்ததற்காக அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

************

துருக்கியில் மே மாதம் 14ஆம் திகதி  ஜனாதிபதி  பதவிக்கான தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள்  ஆரம்பமாகியுள்ளன துருக்கியில் கடந்த மாதம் துருக்கியில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதன் விளைவாக  50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியானதுடன்  5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள்  இடிந்து விழுந்தமை குறிப்பிடத்தக்கது.

**********

தாய்வானை நோக்கி 25 போர் விமானங்கள் மற்றும் 3 போர்க்  கப்பல்களை சீனா அனுப்பியுள்ளதாக  தாய்வான் குற்றம்சாட்டியுள்ளது. இதேவேளை, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாய்வானும் எல்லைப் பகுதியில் போர் விமானங்களையும் போர் கப்பல்களையும் அனுப்பியுள்ளது. கடந்த  1949-ம் ஆண்டு சீனாவிடம் இருந்து தாய்வான் தனி நாடாக பிரிந்த போதிலும்  சீனா  தனது பிராந்தியமாக உரிமை கோரி வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10