ருமடாய்ட் ஒர்த்தரடிஸ் எனப்படும் முடக்குவாத பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன சிகிச்சை

Published By: Ponmalar

03 Mar, 2023 | 04:28 PM
image

ஆண்டுதோறும் லட்சத்தில் 71 நபர்கள் ருமடாய்ட் ஒர்த்தரடிஸ் எனப்படும் முடக்குவாத பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்த முடக்குவாத பாதிப்பு குறித்து முழுமையான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்படவில்லை என மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

மேலும் இந்த முடக்குவாத பாதிப்பின் அறிகுறிகளை தொடக்க நிலையில் அவதானித்தால், தற்போது கண்டறியப்பட்டிருக்கும் நவீன மருந்து, மாத்திரைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

முடக்கு வாத பாதிப்பு என்பது ஒரு நாட்பட்ட கோளாறாகும். இதனை கட்டுப்படுத்துவதற்கு ஆயுள் முழுவதும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதனை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால்.., நாளடைவில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தி, தோல், கண்கள், நுரையீரல், இதயம், ரத்த நாளங்கள் உள்ளிட்ட பல உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.

முடக்கு வாதம் என்பது எம்முடைய நோயேதிர்ப்பு மண்டலமே தன்னிச்சையாக உடல் உறுப்புகளைப் பாதிக்கும் ஒரு நோயாகும். உடலில் உள்ள மூட்டுகளையும், மூட்டு இணைப்புகளையும் தாக்கி, வலி மிகுந்த வீக்கத்தை ஏற்படுத்துகிறது. பின் எலும்பின் வலிமையையும் குறைத்து, மூட்டு சிதைவை உண்டாக்குகிறது.

குருதி பரிசோதனை, எக்ஸ்ரே மற்றும் எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, அதனை ஸ்டீராய்ட் மருந்துகள், வீரியம் இல்லாத ஸ்டீராய்டு மருந்துகள், நியூரோ மெடிசின் எனப்படும் நவீன மருந்துகள் ஆகியவற்றின் மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் அளிக்க இயலும். மேம்படுத்தப்பட்ட மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் அறிமுகமாகி இருக்கும் நவீன மருந்துகளை ஊசி மூலம் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் துல்லியமாக அவதானித்து செலுத்தப்பட்டால், நிவாரணம் முழுமையாகவும், விரைவாகவும் கிடைக்கிறது.

டொக்டர் ராஜ் கண்ணா
தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தற்காலிக சிறுநீர் தேக்கமடைதல் எனும் பாதிப்பிற்குரிய...

2023-03-31 16:07:44
news-image

ரத்த நாள கட்டியை கண்டறியும் நவீன...

2023-03-31 18:14:41
news-image

உடல் வெப்பத்தை போக்கும் குளியல்

2023-03-30 21:50:12
news-image

நாட்பட்ட உயர் இரத்த சர்க்கரை அளவை...

2023-03-28 17:09:25
news-image

தொடக்க நிலையிலான ஆட்டிசம் பாதிப்பிற்கு முழுமையாக...

2023-03-27 14:17:26
news-image

வாந்தி - Vomiting

2023-03-25 12:03:56
news-image

அறைகளில் மணமூட்டியை பயன்படுத்தலாமா..?

2023-03-24 15:29:53
news-image

நீரிழிவு நோயாளிகளின் பாதங்கள் பாதிக்கப்படுவது ஏன்?

2023-03-22 17:08:33
news-image

வாய் புற்றுநோய் பாதிப்பிற்குரிய ஒருங்கிணைந்த சிகிச்சை

2023-03-21 15:44:01
news-image

புரோஸ்டேட் சுரப்பியின் வீக்கத்துக்கான நவீன சிகிச்சை!

2023-03-20 15:53:24
news-image

யுவைடிஸ் எனும் கண் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2023-03-18 16:51:18
news-image

பச்சையாக சாப்பிடாதீர்கள்!

2023-03-18 12:46:01