இந்தியாவின் தொழில்நுட்பமானது கொவிட்டுக்கு முந்தைய நிலைக்குத் திரும்புகிறது - மெக்கின்ஸி

Published By: Vishnu

03 Mar, 2023 | 01:16 PM
image

இந்திய தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையானது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் வளர்ச்சி விகிதங்களைக் காணும்.

அதாவது 8-10 சதவீத வளர்ச்சி நிலைகள் இருக்கும். இது கடந்த மூன்று ஆண்டுகளில் தொழில்துறை கண்ட 14-15 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது என்று மெக்கின்சி தெரிவித்துள்ளது.  

முக்கியமாக, ஒரு பெரிய பொருளாதார நிலைப்பாட்டில் இருந்து மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி எண்களுடன் தொழில் வளர்ச்சியின் தொடர்பும் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது. 

உலகளாவிய தொழில்நுட்ப சேவைகளின் வளர்ச்சி பாரம்பரியமாக மொத்த தேசிய வளர்ச்சியுடன் தொடர்புடையது. எடுத்துக்காட்டாக, 2008-09 மந்தநிலையில் மொத்த தேசிய வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது தொழில்நுட்பச் செலவு 3 மடங்கு குறைந்துள்ளது என்று மெக்கின்சே நிறுவனத்தின் தொழில்நுட்ப சேவைப் பயிற்சியின் மூத்த பங்குதாரரும் உலகளாவிய தலைவருமான விகாஷ் தாகா குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், கொவிட் காலத்திலிருந்து, மொத்த தேசிய வருமானம் மற்றும் தொழில்நுட்ப செலவின் தொடர்புகள் துண்டிக்கப்படுவதை நாங்கள் அவதானித்துள்ளோம், தொழில்நுட்ப செலவுகள் மொத்த தேசிய வருமானத்திலிருந்து சுயாதீனமாக வளர்கின்றன. 

கொவிட் காலத்தில், தொழில்நுட்ப செலவினங்களில் 0.8 சரிவை மட்டுமே நாங்கள் கவனித்தோம். டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வணிகங்களை புத்துயிர் பெறுவதற்கும் வளர்ச்சியை அதிகரிப்பதற்கும் ஒரு முன்னுரிமை மற்றும் மூலோபாய தேவையாக உருவானதால், தொழில்நுட்ப செலவுகள் வளர்ச்சியை விட அதிகமாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிமியாவை ரஸ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிப்பது...

2025-03-18 14:22:58
news-image

9 மாதங்களுக்கு பின்னர் பூமிக்கு திரும்பும்...

2025-03-18 16:29:03
news-image

அவுரங்கசீப் சமாதியை அகற்றக் கோரி நாக்பூரில்...

2025-03-18 12:56:05
news-image

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலில் ஒரு சில...

2025-03-18 12:40:45
news-image

இஸ்ரேல் காசா மீது மீண்டும் கடும்...

2025-03-18 10:46:07
news-image

தடை செய்யப்பட்ட 67 பயங்கரவாத அமைப்புகள்:...

2025-03-18 10:20:54
news-image

கத்தோலிக்க திருச்சபையை சீர்திருத்தும் மூன்று வருட...

2025-03-17 15:27:25
news-image

ஹமாஸிற்கு ஆதரவளித்ததால் விசா ரத்து: அமெரிக்காவில்...

2025-03-17 13:09:43
news-image

வொய்ஸ் ஒவ் அமெரிக்காவை மூடுவதற்கு டிரம்ப்...

2025-03-17 11:06:21
news-image

மத்திய பிரதேச மருத்துவமனையில் தீவிபத்து: 190...

2025-03-17 10:27:51
news-image

வடக்கு மசெடோனியாவில் இரவு விடுதியில் தீ...

2025-03-16 14:34:32
news-image

பலநாடுகளிற்கு எதிராக போக்குவரத்து தடை -...

2025-03-16 12:43:01