உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி: அவுஸ்திரேலியா தகுதி; காத்திருப்பில் இந்தியா

Published By: Digital Desk 5

03 Mar, 2023 | 12:15 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கு எதிராக இந்தூர், ஹொல்கார் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த போர்டர் - காவஸ்கர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 3ஆவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 9 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 2021 - 2023 சுழற்சிக்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட அவுஸ்திரேலியா தகுதிபெற்றுக்கொண்டது.

இந்தூரில் அடைந்த தோல்வியின் காரணமாக இறுதி ஆட்ட வாய்ப்புக்காக இந்தியா காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது.

இன்றைய வெற்றியுடன் அவுஸ்திரேலியா 68.52 சதவீத புள்ளிகளுடன் அணிகள் நிலையில் அசைக்க முடியாத முதலாம் இடத்தைப் பெற்று உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தகுதியை உறுதி செய்துகொண்டது.

3ஆவது டெஸ்டில் தோல்வி அடைந்த இந்தியாவின் சதவீத புள்ளிகள் 60.29 ஆக அமைந்துள்ளது.

எனவே, அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும்.இலங்கை 53.33 சதவீத புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது.

ஒருவேளை இந்தியா தோல்வி அடைந்து நியூஸிலாந்துடனான 2 டெஸ்ட்களிலும் இலங்கை வெற்றிபெற்றால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதிபெறும். ஆனால், அது சாத்தியப்படும் என எதிர்பார்க்க முடியாது.

இது இவ்வாறிருக்க, இந்தியாவுக்கு எதிரான 3ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றிபெற்ற போதிலும் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றியீட்டிய இந்தியா 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய 3ஆவது டெஸ்ட் போட்டி இரண்டரை நாட்களுக்குள் முடிவுக்கு வந்தது.

போட்டியில் வெற்றிபெறுவதற்கு 76 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் 3 நாளான இன்று வெள்ளிக்கிழமை (03) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த அவுஸ்திரேலியா 50 நிமிடங்களில் ஒரு விக்கெட்டை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

முதலாவது ஓவரிலேயே உஸ்மான் கவாஜா ஓட்டம் பெறால் ஆட்டம் இழந்தபோதிலும் ட்ரவிஸ் ஹெட் (49 ஆ.இ.), மானுஸ் லபுஸ்சான் (28 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியை உறுதிசெய்தனர்.

எண்ணிக்கை சுருக்கம்


இந்தியா 1ஆவது இன்: 109 (விராத் கோஹ்லி 22, ஷுப்மான் கில் 21, மெத்யூ கியூன்மான் 16 - 5 விக்., நெதன் லயன் 35 - 3 விக்.),

அவுஸ்திரேலியா 1ஆவது 197 (உஸமான் கவாஜா 60, மார்னுஸ் லபுஸ்சான் 31, ஸ்டீவன் ஸ்மித் 26, உதிரிகள் 22, ரவிந்த்ர ஜடேஜா 73 - 4 விக்., உமேஷ் யாதவ் 12 - 3 விக்., ரவிச்சந்திரன் அஷ்வின் 44 - 3 விக்.)

இந்தியா 2ஆவது இன்: 163 (சேட்டேஷ்வர் புஜாரா 59, ஷ்ரேயாஸ் ஐயர் 26, ரவிச்சந்திரன் அஷ்வின் 16, அக்சார் பட்டேல் 15 ஆ.இ., நெதன் லயன் 64 - 8 விக்.)

அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 76) 2ஆவது இன்: 78 - 1 விக். (ட்ரவிஸ் ஹெட் 49 ஆ.இ., மார்னுஸ் லபுஸ்சான் 28 ஆ.இ.)

ஆட்டநாயகன்: நெதன் லயன்.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2021 - 2023 அணிகள் நிலை


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49