அள­வுக்கு மிஞ்­சிய வெப்பம், வறட்­சியால் விளை­நி­லங்­களின் பாதிப்பு, உற்­பத்­தி­களின் வீழ்ச்சி, பொரு­ளா­தார முடக்கம் என ஆரம்­பிக்கும் இன்­றைய உலக சூழல் பஞ்சம், நோய், சூழல்­மாசு என்ற பல்­வேறு கோணங்­களில் மோச­மான விளை­வு­களை மக்கள் எதிர்­கொள்ள வேண்­டிய நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது.

காரணம் என்­ன­வெனின் புவி அள­வுக்கு மீறிய வகையில் தனது தன்­மையில் இருந்து மாறி­வ­ரு­கின்­ற­மையே இன்று பாரிய பிரச்­சி­னை­யாக அமைந்­துள்­ளது. இன்று புவி வெப்­ப­மாதல் தன்மை மிக அதி­க­மா­கி­யுள்­ளது. எனினும் நவீ­னத்­து­வமும், விஞ்­ஞா­னமும் தனது ஆராய்ச்­சி­களை நிறுத்­திக்­கொள்­வ­தாகத் தெரி­ய­வில்லை.

புவி வெப்­ப­ம­டைதல் என்ற காரணி தொடர்பில் பகுத்­த­றிவு ரீதி­யாக சிந்­திக்­கும்­போதே பல கார­ணி­களை முன்­வைக்க முடியும். குறிப்­பாக புவி வெப்­ப­ம­டை­தலின் மூல­மாக ஏற்­படும் பசுங்­குடில் வாயுவின் அதி­க­ரிப்­பிற்கு பிர­தான காரணம் எரி­பொ­ருளை அடிப்­ப­டை­யாகக் கொண்ட இன்­றைய நவீன நாக­ரிக வளர்ச்­சியும் அபி­வி­ருத்தி மற்றும் பொரு­ளா­தார கார­ணி­களை அடிப்­ப­டை­யாக வைத்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் காட­ழிப்பு மற்றும் நிலப்­ப­யன்­பா­டு­க­ளு­மே­யாகும்.

குறிப்­பாக கூறு­வ­தாயின் வளர்ச்சி மேம்­பாடு என்ற கோட்­பாட்டின் அடிப்­ப­டையில் கையா­ளப்­படும் பொரு­ளா­தார போக்கும் செயற்­பா­டு­க­ளுமே முக்­கிய கார­ண­மாகும். 20ஆம் நூற்­றாண்டின் பிற்­ப­கு­தியில் தொழில்­நுட்ப புரட்சி ஆரம்­ப­மா­கி­யது. அதன் மாற்றம் உலகின் வல்­ல­ரசு போட்­டிகள், தொழிற்­துறை வளர்ச்சி கண்ட நாடுகள் நவீ­னத்­துவ நாடு­களின் போட்­டியில் உலகில் இயற்கை தன்­மைகள் அழிக்­கப்­பட்டும், சூழலின் மீதான அக்­கறை குறைந்­த­துமே கார­ண­மாகும்.

அதேபோல் கரி­ய­மி­ல­வாயு மற்றும் ஏனைய பசு­மை­யில்லா வாயுக்­களின் பரவல் வளி­மண்­ட­லத்தில் அதி­க­ரித்­தமை புவி வெப்­ப­நிலை அதி­க­ரிக்க மிக­முக்­கிய கார­ண­மாகும். உலகம் முழு­வதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் எனற நோக்கம், இலா­பத்தை மாத்­திரம் அடிப்­ப­டை­யாக கொண்ட பொரு­ளா­தார செயற்­பா­டுகள் மற்றும் அர­சியல் ஆதிக்கம் இன்று இயற்­கையை மீட்­டெ­டுக்க முடி­யாத நிலை­மைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. இந்த பய­ணத்தின் போக்கில் ஏற்­பட்­டுள்ள உல­க­ம­ய­மாதல் இன்று உல­கத்­தையே அழிக்கும் கட்­டத்தில் வந்து நிற்­கின்­றது.

குறிப்­பாக கடந்த நூறு ஆண்­டு­களில் உலகின் சரா­சரி வெப்­ப­நி­லை­யா­னது 0.0073 டிகிரி செல்­சியஸ் அளவில் உயர்ந்­துள்­ளது. அதேபோல் இந்த நூற்­றாண்டின் இறு­திக்குள் 2 தொடக்கம் 5 டிகிரி செல்­சியஸ் வரையில் உலகின் சரா­சரி வெப்­ப­நிலை உய­ரக்­கூ­டிய வாய்ப்­புகள் உள்­ள­தெ­னவும் எச்­ச­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

அதேபோல் கடல் நீர் மட்டம் இன்று 1.9 மில்­லி­மீட்டர் சரா­சரி விகி­தத்தில் உயர்ச்­சி­ய­டைந்­துள்­ளது. உலகில் மத்­தி­ய­கி­ழக்கு மற்றும் தெற்கு நாடுகள் அதிக வரட்­சியை எதிர்­கொள்ள நேர்ந்­துள்­ளது. இந்த பரவல் உலகம் முழு­வதும் தாக்கம் செலுத்தும் கார­ணி­யாக மாறி­யுள்­ளமை முக்­கிய அம்­ச­மாகும். விவ­சாய நிலங்கள், நீர் நிலங்கள் வறட்சி கண்­டுள்­ளன. சரா­சரி மழை­வீழ்ச்சி பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இயற்கை அனர்த்­தங்கள், அத­னுடன் கூடிய நோய்கள் என பரவ ஆரம்­பித்­துள்­ளன. இன்று மக்கள் இயற்­கை­யுடன் தமது போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளனர்.

ஆனால் நவீன வளர்ச்­சி­போக்கு தொடர்பில் இன்று மக்கள் மத்­தியில் தோன்­றி­யுள்ள அச்­ச­மா­னது 1970களில் இருந்தே சர்­வ­தேச அளவில் கேள்­வி­யா­கவே உள்­ளது. உலகம் கையாளும் நவீன வளர்ச்­சிப்­போக்­கா­னது நிலை­யான நீடிக்­கக்­கூ­டிய ஒன்று தானா அல்­லது இந்த நவீன வளர்ச்­சிப்­போக்கு கார­ண­மாக எதிர்­கால சமூகம் பாதிக்­கப்­ப­டுமா என்­பது அப்­போ­தி­ருந்தே கேள்­வி­யாக இருந்­தது. குறிப்­பாக 70களில் நடை­பெற்ற ஸ்டோக்ஹோம், ஜோக­னஸ்பேர்க் மாநா­டு­களில் இக் கேள்­விகள் விவா­த­மா­கவே முன்­வைக்­கப்­பட்­டன.

அதேபோல் 1980 களில் இந்த நிலைமை தொடர்பில் உலக நாடுகள் கவனம் செலுத்த ஆரம்­பித்­தன. புவி வெப்­ப­மாதல் மற்றும் பரு­வ­கா­ல­நிலை மாற்றம் தொடர்பில் சிந்­தனை ஓர­ள­வேனும் கவ­னத்தில் கொள்­ளப்­பட்­டது. அதன் பின்னர் கால­நிலை மாற்றம் தொடர்­பான சர்­வ­தேச அமையம் வெளி­யிட்ட அறிக்­கையை தொடர்ந்து முதல் கால­நிலை மாநாடு 1992 ஆம் ஆண்டு பிரே­சிலில் ரியோடி ஜெனிரோ புவி மாநாடு நடை­பெற்­றது. இந்த மாநாட்டில் புவி வெப்­ப­ம­டைதல், கால­நிலை மாற்றம் என்­பன உறுதி செய்­யப்­பட்­டன.

அன்றில் இருந்து சர்­வ­தேச அமை­யங்கள் பல்­வேறு கால­நிலை மாநா­டு­களை நடத்தித் தான் வரு­கின்­றன. ரியோவில் இருந்து லிமா, இப்­போது பாரிஸ் மாநாடு வரையில் கால­நிலை தொடர்­பி­லான மாநா­டுகள் நடந்­துள்­ளன. ஆனால் புவி வெப்­ப­மா­தலை தடுக்க எவ்­வா­றான கார­ணிகள் கைகொ­டுக்கும் என்ற தீர்­மானம் ஒன்றை இன்­று­வ­ரையில் எட்­ட­மு­டி­ய­வில்லை.

ஏனெனில் இன்­றைய பொரு­ளா­தார போக்­கு­களும், நாடு­க­ளுக்கு இடை­யி­லான சுய­நல போக்கும், பொரு­ளா­தார வர்த்­தக ரீதி­யி­லான பன்­னாட்டு நிறு­வ­னங்­களின் மறை­மு­க­மான, அதே­நே­ரத்தில் அழுத்­தங்கள் மற்றும் அர­சியல் சுய­நல போக்­குமே கால­நிலை சீர்­நி­லையை பேண­மு­டி­யாத நிலைமை ஏற்­பட கார­ண­மாகும்.

அதேபோல் இன்று வல்­ல­ரசு நாடு­களும் வளர்ந்­து­வரும் நாடு­களும் முகம்­கொ­டுக்கும் மிக முக்­கிய பிரச்­சி­னை­யாக சுற்­றுச்­சூழல் மாசு பிர­தான கார­ண­மாக மாறி­யுள்­ளது. காபன் குறைப்­பீடு கொண்ட சூழலை உரு­வாக்கும் முயற்­சி­களை அனை­வரும் எடுத்­து­வரும் நிலையில் கால­நிலை மாநா­டு­களை கூட நடத்­த­வேண்­டிய நிலை உலக நாடு­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இந்த மாத ஆரம்­பத்தில் ஐக்­கிய நாடு­களின் சர்­வ­தேச கால­நிலை மாநாடு பிரான்ஸில் ஆரம்­ப­மா­கி­யது. இந்த மாநாட்டில் உலக நாடுகள் அனைத்தும் பங்­கு­பற்றி தத்­த­மது நாடு­களின் சூழலை பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை பற்றி ஆராய்ந்­துள்­ளன. சுமார் இரண்டு வாரங்­க­ளாக நடை­பெற்ற இந்த மாநாட்டின் போது உலகின் காபன் மாசு வெளி­யீ­டு­களை குறைப்­பது தொடர்பில் உலக வெப்­ப­மா­தலை 2பாகை செல்­சியஸ் வரையில் வரை­யறை செய்­வது தொடர்பில் முக்­கிய கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.

அதேபோல் கால­நிலை மாற்றம் தொடர்பில் உத­வக்­கூ­டிய புதிய தொழில் நுட்­பங்­களை அறி­மு­கப்­ப­டுத்­தியும், புதுப்­பித்தல் நட­வ­டிக்கை என்றும் திட்­டத்தின் கீழ் 5 வரு­டங்­க­ளுக்கு அதி­க­மான காலப்­ப­கு­தியில் மேற்­கொள்­ளப்­படும் மாசு ஏற்­ப­டுத்­தாத சக்தி வளங்கள் தொடர்பில் ஆராய்ச் சிகளை முன்­னெ­டுப்­பது தொடர்­பிலும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

அதேபோல் மாசற்ற சூழலை காப்­பாற்றும் நோக்­கத்தில் உலகின் வல்­ல­ரசு நாடுகள் மில்­லியன் ரூபா தொகையை ஒதுக்­கீடு செய்­வ­துடன் உலக வங்­கி­யுடன் இணைந்த நிதி ஒதுக்­கீட்டு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அதேபோல் மேற்­படி மாநாட்டில் புதுப்­பிக்க கூடிய சக்தி வளங்கள், போக்­கு­வ­ரத்து துறை­யி­லான மாசு வெளி­யீ­டு­களை கட்­டுப்­ப­டுத்தல், கழிவு முகா­மைத்­துவம் மற்றும் நக­ரங்­களின் காபன் வெளி­யீ­டு­களை குறைத்தல் என்­பன தொடர்­பிலும் அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட்­டுள்­ளது. அதேபோல் கனிய சக்தி வளங்­களை பயன்­ப­டுத்தும் நாடு­க­ளுக்கு காபன் வெளி­யீ­டு­களை குறைக்க நிதி வழங்­கவும் உலக வங்கி தயா­ரா­கி­யுள்­ளது.

அத்­தோடு இந்த மாநாடு நடை­பெற முன்­னரே உல­க­மெங்கும் பல பகு­தி­களில் பல ஆர்ப்­பாட்­டங்­களும் போராட்­டங்­களும் இடம்­பெற்­றதும் முக்­கிய விட­ய­மாகும். அதா­வது மேற்­படி கால­நிலை மாநாட்டின் போது உலக தலை­வர்கள் அனை­வரும் ஒரு­மித்த வகையில் கால­நி­லையை பாது­காக்கும் வகையில் உறு­தி­யான உடன்­ப­டிக்கை ஒன்றை எட்ட வேண்டும் என மக்கள் வலி­யுறுத்­தி­யுள்­ளனர்.

ஆகவே மக்கள் இன்று தூய்­மை­யான ஒரு சூழலை நோக்­கிய போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ளமை தெளி­வாக வெளிப்­ப­டு­கின்­றது. எம்மால் நவீ­னத்­துவ பாதையில் விஞ்­ஞான பய­ணத்தை ஆரம்­பித்­தாலும் இயற்­கையை எதிர்த்து பய­ணிக்க முடி­ய­வில்லை என்­பது வெளிப்­பட்டு நிற்­கின்­றது.

தொழில் அபி­வி­ருத்தி நாக­ரிக மாற்றம் நவீன கண்­டு­பி­டிப்பில் முன்­னி­லையில் வளர்ச்சி கண்­டு­வரும் நாடான சீனா இன்று காற்று மாசு­பாட்டில் பாரிய சிக்­கலை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ஏற்­பட்­டுள்­ளது. காற்று மாசு­பாடு அதி­க­ரித்­துள்ள கார­ணத்­தினால் சீன மக்­க­ளுக்கு மூன்­றா­வது தட­வை­யா­கவும் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக வாகன பயன்­பாடு அதி­க­ரித்­துள்­ள­தோடு தொழிற்­சா­லை­களின் செயற்­பா­டுகள் பல­ம­டைந்­துள்ள நிலையில் பல நக­ரங்­களில் தூய்­மை­யான காற்று மாசு­பாடு ஏற்­பட்­டுள்­ளது. இதனால் அங்­குள்ள நக­ரங்­களில் வாழும் மக்கள் சுத்­த­மான காற்றை சுவா­சிப்­பதில் பாரிய சிக்­கல்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர்.

இதனால் தலை­நகர் பீஜிங்கில் முதன்­மு­றை­யாக பாட­சா­லை­க­ளுக்கு விடு­முறை விடுக்­கப்­பட்­ட­துடன் போக்­கு­வ­ரத்து கட்­டுப்­பாடும், கட்­டு­மான பணி­களின் தடையும் விதிக்­கப்­பட்­டது. எனினும் இடர்­பா­டுகள் கார­ண­மாக அந்தத் தடை நீக்­கப்­பட்­டது. அவ்­வாறு இருந்தும் மீண்டும் இரண்­டா­வது தட­வை­யா­கவும் அதே எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டது. சீனாவில் மக்­க­ளினால் தூய்­மை­யான காற்றை சுவா­சிக்க முடி­யாத கார­ணத்­தினால் மீண்டும் மூன்­றா­வது தட­வை­யா­கவும் சிவப்பு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. அத்­தோடு மக்­களை அவ­தா­ன­மாக இருக்­கும்­ப­டியும் அர­சாங்கம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது.

மேலும் மக்­களின் பிரச்­சி­னையை சாத­க­மாக பயன்­ப­டுத்­திய சீன நிறு­வனம் ஒன்று லேக் லூயிஸ் மலைத்­தொ­டரில் சுத்­த­மான காற்றை போத்­தல்­களில் அடைத்­தது பொது மக்­க­ளுக்கு சுவா­சிக்­கக்­கூ­டிய செயற்கை சாத­னங்­களை வழங்கி வரு­கின்­றது. சீனாவில் மட்­டு­மில்­லாது கன­டாவில் இருந்தும் தூய்­மை­யான காற்று கொண்­டு­வந்து விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றது.

எனினும் சீனாவின் இந்த சூழல் மாசு­பாட்டு நிலைமை வெறு­மனே சீன எல்­லை­யுடன் மட்­டுப்­ப­டாது உலகின் தொழிற்­துறை மற்றும் வளர்­சி­கண்­டு­வரும் அனைத்து நாடு­க­ளுக்கும் முக்­கிய எச்­ச­ரிக்­கை­யாகும். வெறு­மனே அபி­வி­ருத்தி, பணம், நவீ­னத்­துவம் என பய­ணிக்கும் நாடுகள் இன்று தமது சூழலை திரும்­பிப்­பார்க்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது.

அதேபோல் உலகில் பல்­வேறு நாடுகள் தமது தொழில் வளர்ச்­சியின் மூல­மாக தமது இருப்­பு­களை தக்­க­வைத்து வரும் நிலையில் உட­ன­டி­யாக தொழிற்­சாலை தடை­க­ளையோ அல்­லது மாற்று நட­வ­டிக்­கை­க­ளையோ மேற்­கொள்ள முடி­யாது. ஒரு­வேளை இந்த முயற்­சியின் மூல­மாக நம்­மு­டைய பூமி ஒட்­டு­மொத்த அழிவில் இருந்து தப்­பி­னா­லும்­கூட எதிர்­கா­லத்தில் தொடர்ந்தும் பல ஆண்­டு­க­ளுக்கு இதன் அழி­வு­களை நாம் அனு­ப­வித்து வர­வேண்டும்.

ஏனெனில் நாம் ஏற்­க­னவே வெளி­யிட்­டதும் தொடர்ந்து வெளி­யிட்­டுக்­கொண்­டி­ருக்கும் காபன் டை ஒக்­சைட்டு வாயுவின் ஆயு­ளா­னது இன்னும் பல ஆண்டு காலத்­திற்கு இந்த பூமியில் நீடித்­தி­ருக்கும் நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அவ்­வா­றான நிலையில் எமது மாற்று நட­வ­டிக்­கைகள் அனைத்தும் நீண்ட காலத்­திற்கு எம்மை பாது­காக்கும் வகையில் அமை­யாது.

இன்­றைய சூழலில் நாம் தற்­கா­லிக தீர்வை நோக்­கிய பய­ணத்தை பழ­கிக்­கொண்­டுள்ளோம். உணவுப் பழக்­க­வ­ழக்கம் முதற்­கொண்டு மருத்­துவம், வாழ்க்கை முறை வரையில் நாம் தற்­கா­லிக பாது­காப்பை மட்­டுமே மேற்­கொண்டு வரு­கின்றோம். அந்த தற்­கா­லிகம் இன்று இயற்­கை­யு­ட­னான போராட்­டத்­திலும் பழ­கி­விட்­டது.

அந்தப் பழக்­கமே இன்று எம்மை அழிவின் விளிம்பில் வைத்­துள்­ளது என்று கூறு­வது நியா­ய­மான கூற்­றாகும். நகர அபி­வி­ருத்தி என்ற பெயரில் வடி­கா­ல­மைப்பு முறை­மையில் விடும் தவ­றுகள் இறு­தியில் வெள்­ளப்­பெ­ருக்கு நிலை­மை­களில் பாரிய சேதங்­களை ஏற்­ப­டுத்­தி­யமை அண்­மையில் இந்­தி­யாவில் தமிழ் நாட்டில் ஏற்­பட்ட வெள்­ளப்­பெ­ருக்கு நல்ல உதா­ர­ண­மாகும்.

அதேபோல் அணு ஆயுத பரி­சோ­த­னைகள், நவீன ஆயுத பரி­சோ­த­னைகள் என்­பன கார­ண­மாக சூழலில் ஏற்­பட்­டுள்ள மாற்றம், மற்றும் நவீன அறி­வியல் கண்­டு­பி­டிப்­பு­க­ளினால் ஏற்­பட்­டுள்ள மாற்­றங்கள் என்­பன இன்று உல­க­ளா­விய ரீதியில் பாரிய சிக்­கலை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அதன் விளை­வு­க­ளையும் இன்று மக்­களால் அனு­ப­விக்க முடி­கின்­றது.

அதேபோல் பயங்­க­ர­வாதம், ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைகள் மூல­மா­கவும் வெடி­குண்டு தாக்­கு­தல்கள் மூல­மாக ஏற்­படும் மாசு­பாடும், சிறிய வகையில் நிலம், நீர் மாசு­பா­டுகள், இர­சா­யன கலப்­புகள், கால­நி­லைக்கு முர­ணான விவ­சாய செயற்­பா­டு­களும் முழு­மை­யாக மக்­களை பாதிக்கும் வகையில் தான் அமைந்­துள்­ளன. ஆகவே எந்­தப்­பக்கம் நோக்­கி­னாலும் இறு­தியில் பாதிப்­புகள் எம்­மையே வந்து சேர்­கின்­றன.

ஆகவே மக்கள் இப்­போ­தா­வது தமது நிலைப்­பாட்டை மாற்­றிக்­கொள்ள வேண்டும். நாம் இயற்­கை­யுடன் முரண்­பட்டு அல்­லது போட்­டி­போட்டு வெற்­றி­கொள்ள முடி­யாது. இயற்­கையை, எமது நிலங்­க­ளையும் நீர் நிலங்­க­ளையும் பாது­காப்­பதன் மூல­மா­கவே எமது சூழலை பாது­காக்க முடியும். அதை மக்கள் தெளி­வாக விளங்­கிக்­கொண்டு இப்­போதில் இருந்­தா­வது சூழலை பாது­காக்க பழ­கிக்­கொள்ள வேண்டும்.

சாதா­ர­ண­மாக ஒரு மரத்தை வெட்­டு­வதில் இருந்து ஆரம்­பிக்கும் சூழல் மாசு­பாடு இறு­தியில் மிகப்­பெ­ரிய விளை­வு­களில் வந்து முடி­கின்­றது. புவி வெப்­ப­மாதல் அதி­க­ரித்து வரும் நிலையில் இயற்கை வாயுவின் அதி­க­ரிப்­பிற்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுத்து எமது சமு­தா­யத்தை பாது­காக்க வேண்டும். இன்று சீனா­விற்கு ஏற்­பட்­டுள்ள நிலைமை போன்றே அந்த மக்கள் போத்தல் காற்றை சுவா­சிக்கும் நிலைமை எதிர்­கா­லத்தில் உலகில் வாழும் அனைத்து மக்­களும் செயற்கை காற்றை சுவா­சித்து வாழக்­கூ­டிய நிலைமை ஏற்­படும்.

ஆகவே இன்று நாம் சூழலை பாது­காப்­பதே எதிர்­கா­லத்தில் தூய்­மை­யான சூழலை பரா­ம­ரிக்க அடிப்­ப­டை­யாக அமையும். ஒவ்வொரு மனி­தனும் இயற்­கையை நேசித்து பாது­காத்தால் மட்­டுமே எதிர்­காலம் பசு­மை­யா­ன­தாக அமையும். அதை விடுத்து விஞ்­ஞான போக்கில் இயற்­கை­யுடன் மோதிக்­கொண்டால் இறுதியில் வெல்லப்போவது என்னவோ இயற்கையே. ஆகவே தொடர்ந்தும் இயற்கையுடன் மனிதன் சவாலை எதிர்கொள்ள வேண்டும்.