சீன உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைப்பு

Published By: Nanthini

03 Mar, 2023 | 11:43 AM
image

சீன - இலங்கை பெளத்த நட்புறவுச் சங்கம் மற்றும் சீன உயர்ஸ்தானிகராலயத்தின் ஒத்துழைப்புடன் திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிங்களம், தமிழ் மற்றும் இஸ்லாம் ஆகிய இனங்களை சேர்ந்த 225 வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு நேற்று (2) உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. 

உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு குச்சவெளி பிச்சமல் விகாரை வளாகத்தில் நடைபெற்றது. 

இதன்போது சீன உயர்ஸ்தானிகர் கிவ் சென்ஹொங், சீனா, இலங்கையின் நண்பன் என்ற அடிப்படையில் பல உதவிகளை செய்து வருவதாகவும், அதன் ஒரு கட்ட உதவியாக இந்த உணவுப்பொதிகளின் விநியோகம் அமைவதாகவும் தெரிவித்தார். 

மேலும், இலங்கை கடினமான நிலவரங்களை சந்தித்தபோது அதிலிருந்து மீட்சிபெற ஆரம்பத்திலிருந்து இன்று வரை சீனா ஒத்துழைப்பு வழங்கிவருவதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் வணக்கத்துக்குரிய தேரர்கள், இலங்கைக்கான சீன உயர்ஸ்தானிகர், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், சீன உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ். ரத்னாயக்க, மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என். ஜயவிக்ரம, குச்சவெளி பிரதேச செயலாளர் கே. குணநாதன், இலங்கை - சீன பெளத்த நட்புறவுச் சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16