(எம்.ஆர்.எம்.வசீம்)
கனடாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் மோசடி செய்துவந்த நபர் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து இதுவரை 75பேரிடம் 4 கோடி ரூபாவுக்கும் அதிகம் மோசடி செய்துள்ளதாகவே ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்த நபரின் மோசடியில் சிக்குண்டவர்கள் 5இலட்சம் ரூபா முதல் 22இலட்சம் ரூபாவரை வழங்கி இருப்பதுடன் கனடாவில் தொழில் பெற்றுக்கொள்வதற்காக ஒரு நபரிடமிருந்து 33 இலட்சம் ரூபா சந்தேக நபரினால் கோரப்பட்டுள்ளதாக தற்போது தெரிவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபருடன் மேலும் ஒரு நபர் தொடர்பு இருப்பதாகவும் அரசியல் பலம் உள்ளவர்களின் தலையீட்டின் அடிப்படையிலேயே இந்த மோசடி இடம்பெறுவதாக, மோசடியில் சிக்குண்டுள்ள நபர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அத்துடன் நாடு பூராகவும் இந்த மோசடியில் சிக்குண்டவர்கள் பொலிஸ் நிலையங்களுக்கு சென்று குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்தபோதும் அந்த முறைப்பாடுகளை பொலிஸார் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாகவும் குறித்த நபர் தெரிவித்தார்.
எவ்வாறு இருந்தபோது குறித்த சந்தேக நபர் 4 கோடி ரூபாவரை மோசடி செய்துள்ளதாகவே தெரியவருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணைப்பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பணயகம் அறிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM