முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் இந்தியாவுக்கான இலங்கையின் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதியாக கண்டி பிரபல இளம் வர்த்தகர் துரை சிவசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமனக் கடிதத்தை முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அண்மையில் வழங்கிவைத்தார்.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் அபிவிருத்தி நோக்கில் இந்திய முதலீடுகளை உள்ளீர்க்கும் வகையில் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கண்டியில் பழம்பெரும் சரஸ்வதி ஸ்டோர், பளயகாட்ஸ், சிவாஜி எம்போரியம் வர்த்தக நிறுவனங்களின் நிறுவுனரும் மத்திய மாகாண இந்து மாமன்றம், கண்டி இந்து கலாசார நிலையம் என்பவற்றின் ஸ்தாபகருமான அமரர் அ.துரைசாமிப்பிள்ளை - அமரர் செல்லம்மாள் துரைசாமிப்பிள்ளை தம்பதியின் புதல்வரான இவர் கண்டி திரித்துவக் கல்லூரியின் பழைய மாணவராவார்.
தனது தந்தையாரின் மறைவுக்குப் பின் பழமையான மேற்படி வர்த்தக நிறுவனங்களை பொறுப்பேற்ற இவர், தற்போது மேலும் ஐந்து நிறுவனங்களிலும் நிறுவனப் பணிப்பாளர், நிர்வாகப் பங்குதாரராக வர்த்தகத்துறையில் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இவரது நிறுவனங்களில் ஏறக்குறைய 300க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி, பல குடும்பங்கள் வருமானம் பெறுவதற்கு வழி ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த இருபது வருடங்களாக மத்திய மாகாண இந்து மாமன்றம், கண்டி அறக்கட்டளையின் முதன்மை தர்மகர்த்தா மற்றும் தலைவராக பல்வேறு சமய சமூகப் பணிகளை ஆற்றிவரும் இவர், கண்டி றோட்டரி கழகத்தின் உறுப்பினராகவும், கண்டி மெட்ரோ பொலிடன் றோட்டரி கழகத்தின் ஆரம்பகர்த்தாவாகவும், ஆரம்ப வருடத் தலைவராகவும், சர்வதேச றோட்டரி கழகத்தின் பிரதான நன்கொடையாளராகவும் சமூக நலன்புரி செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதுடன் சர்வதேச உறவுகளையும் பேணி வருகிறார்.
கண்டி திரித்துவக் கல்லூரி ரக்பி விளையாட்டுக் குழுவின் தலைவராக கடமையாற்றியதுடன் லயன் விருது பெற்றவர்.
கண்டி விளையாட்டுக் கழகத்தில் பல பதவி நிலைகளிலும் அப்கண்ட்ரி லயன்ஸ் ரக்பி குழுவின் ஆரம்ப வருடத் தவிசாளராகவும் விளையாட்டுத்துறையில் பெற்ற அனுபவங்களை இளைய தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதில் பெரும் பங்கு வகித்து வருகிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM