இந்தூர் ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு பொருத்தமற்றதா? ஆஸி.யின் கடைசி 6 விக்கெட்கள் 11 ஓட்டங்களுக்கு சரிவு

02 Mar, 2023 | 06:59 PM
image

(நெவில் அன்தனி)

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் நடைபெற்றுவரும் போர்டர் - காவஸ்கர் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 3ஆவது போட்டியில் இரண்டு அணிகளும் துடுப்பாட்டத்தில் கோட்டை விட்டுள்ளன.

போட்டியன் 2ஆம் நாளாள இன்றுவரை 30 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 469 ஓட்டங்கள் மாத்திரமே பெறப்பட்டுள்ளன. அவுஸ்திரேலியா பெற்ற 197 ஓட்டங்களே இந்தப் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் பெறப்பட்ட அதிகபட்ச மொத்த எண்ணிக்கையாகும்.

இந்தியா 1ஆவது இன்னிங்ஸில் 109 ஓட்டங்களையும் 2ஆவது இன்னிங்ஸில் 163 ஓட்டங்களையும் பெற்றது.

2ஆம் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா தனது கடைசி 6 விக்கெட்களை வெறும் 11 ஓட்டங்களுக்கு இழந்தது.

இதன் காரணமாக இந்த ஆடுகளம் துடுப்பாட்டத்திற்கு உகந்ததல்ல என ஐசிசி முத்திரை குத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் 3 நாள் ஆட்டம் மீதமிருக்க போட்டியில் வெற்றிபெறுவதற்கு அவுஸ்திரேலியாவுக்கு வெறும் 76 ஓட்டங்களே தேவைப்படுகிறது.

இந் நிலையில், துடுப்பெடுத்தாடுவதற்கு இந்த ஆடுகளம் மிகவும் சிரமமானது என இந்திய கிரிக்கெட் வீரர் சேத்தேஷ்வர் புஜாரா, 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் குறிப்பிட்டார்.

'இந்த ஆடுகளத்தில் துடுப்பெடுத்தாடுவது மிகவும் சிரமமானது. அது இலகுவானதல்ல. தடுத்தாடும்போது பந்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவேண்டும். பந்தை முன்னங்காலால் எட்ட முடியும் என்பதை உறுதிசெய்துகொள்ளவேண்டும். அல்லது பின்னோக்கி நகர்ந்து தடுத்தாட வேண்டும். 75 ஓட்டங்கள் முன்னிலை என்பது பெரியதல்ல. ஆனால், ஒரு வாய்ப்பு இருக்கிறது. எதிர்த்தாடலும் தடுத்தாடலும் கலந்த சிறப்பான இரட்டை ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். தடுத்தாடிக்கொண்டே இருந்தால், எகிறிப்பாயும் ஒரு பந்து கையுறையில் உராய்ந்தவாறு சென்றுவிடும். நான் நேர்மறையாக துடுப்பெடுத்தாடினேன். முடிந்த மட்டும் ஓட்டங்களைப் பெற முயற்சித்தேன். அக்சாருடன் சிறப்பான இணைப்பாட்டம் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அது உதவியிருக்கும்' என்றார்.

அவரது கூற்றின் பிரகாரம் இந்தூர் ஆடுகளம் துடுப்பாட்டத்துக்கு உகந்ததல்ல என்றே கருத வேண்டியுள்ளது. எனினும் ஐசிசி மத்தியஸ்தர்கள் என்ன தீர்ப்பு வழங்குவார்கள்? என்ன கருத்தை வெளியிடுவார்கள்? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வெண்டும்.

கடந்த வருடம் பெங்களூரு ஆடுகளம், பிறிஸ்பேன் ஆடுகளம், ராவல்பிண்டி ஆடுகளம் ஆகியவற்றின் தன்மைகள் சராசரிக்கும் குறைவாக இருந்ததாக ஐசிசி குறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாம் நாள் ஆட்டம்

இந்தியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 2ஆம் நாள் ஆட்டத்தில் மாத்திரம் 16 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டதுடன் 204 ஓட்டங்களே பெறப்பட்டன.

156 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்கள் என்ற நிலையிலிருந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த அவுஸ்திரேலியா, எஞ்சிய 6 விக்கெட்களை 41 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது. அதிலும் கடைசி 6 விக்கெட்கள் வெறும் 11 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டன. (197 - 10 விக்.)

அவுஸ்திரேலியாவின் மொத்த எண்ணிக்கையான 197 ஓட்டங்களில் உஸ்மான் கவாஜா முதல் நாளன்று பெற்ற 60 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது. அவரை விட மார்னுஸ் லபுஸ்சான் (31), ஸ்டீவன் ஸ்மித் (26), கெமரன் க்றீன் (21) ஆகியோரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். உதிரிகளாக 22 ஓட்டங்கள் அவுஸ்திரேலியாவுக்கு கிடைத்தது.

இந்திய பந்துவீச்சில் ரவிந்த்ர ஜடேஜா 78 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் உமேஷ் யாதவ் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்தியா சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றது.

இந்தியா ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று சிறந்த நிலையில் இருந்தது. இதன் காரணமாக இந்தியா கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 6 விக்கெட்கள் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன.

சேத்தேஷ்வர் புஜாரா மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 59 ஓட்டங்களைப் பெற்று 8ஆவதாக ஆட்டமிழந்தார்.

ஷ்ரேயாஸ் ஐயர் (26), ரவிச்சந்திரன் அஷ்வின் (16), அக்சார் பட்டேல் (15 ஆ.இ.) ஆகியோரே துடுப்பாட்டத்தில் ஓரளவு பிரகாசித்த ஏனைய வீரர்களாவர்.

பந்துவீச்சில் நெதன் லயன் 64 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்தி டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் தனது 2ஆவது அதிசிறந்த பந்துவிச்சுப் பெறுதியைப் பதிவு செய்தார். 

பெங்களூருவில் 6 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 50 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களைக் கைப்பற்றிதன் மூலம் நெதன் லயன் அதிசிறந்த இன்னிங்ஸ் பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்திருந்தார். 

மூன்றாவது டெஸ்ட் போட்டி பெரும்பாலும் 3 நாளான வெள்ளிக்கிழமை (03) பகல் போசன இடைவேiளைக்கு முன்னர் முடிவுக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரளவு சம அளவில் மோதிக்கொள்ளப்படும் கொழும்பு...

2025-03-14 19:29:36
news-image

நிப்புனைத் தொடர்ந்து ரமேஷ் சதம் குவிப்பு;...

2025-03-14 21:49:45
news-image

நியூஸிலாந்தை மண்டியிடச் செய்த அறிமுக வீராங்கனை...

2025-03-14 17:33:10
news-image

நியூட்டனின் சகலதுறை ஆட்டத்தால் 2ஆம் அடுக்கு...

2025-03-14 14:08:12
news-image

அவிஷ்க, கவின், அசலன்க ஆகியோரின் அபார...

2025-03-13 19:45:02
news-image

கண்டி அணிக்கு எதிரான போட்டியில் பலமான...

2025-03-13 19:00:12
news-image

மாதத்தின் சிறந்த வீரர், வீராங்கனை ஐசிசி...

2025-03-13 16:16:47
news-image

நஞ்சிங் உலக மெய்வல்லுநர் உள்ளக அரங்க...

2025-03-14 13:39:02
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக்: சங்கா சதம்...

2025-03-12 17:16:17
news-image

ஈட்டி எறிதலில் தேசிய சாதனை நிலைநாட்டி...

2025-03-10 18:33:39
news-image

மாளிகாவத்தை யூத்தை அதிரவைத்து 3 -...

2025-03-09 23:17:50
news-image

நியூஸிலாந்தை வீழ்த்தி சம்பியன்ஸ் கிண்ணத்தை இந்தியா...

2025-03-09 23:53:26