(எம்.எம்.சில்வெஸ்டர்)
ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் நடைபெற்ற 14 ஆவது ஃபஸ்ஸா துபாய் குரோன் பிறீ (Fazza Dubai Grand Prix ) மெய்வல்லுநர் போட்டியில் பங்கேற்ற இலங்கை பாரா அணி வீரர்கள் 2 தங்கப் பதக்கங்கள் அடங்கலாக 4 பதக்கங்களை சுவீகரித்தனர்.
இதன்படி, இந்த மெய்வல்லுநர் போட்டியில் பங்கேற்றிருந்த நால்வரும் பதக்கங்களை கைப்பற்றியிருந்தமை விசேட அம்சமாகும்.
ஆண்களுக்கான T47 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றிருந்த மதுரங்க சுபசிங்க மற்றும், ஆண்களுக்கான T42 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றிந்த அனில் பிரசன்னவும் தங்கப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.
இதேவளை, ஆண்களுக்கான T44 100 மீற்றர் போட்டியில் இலங்கை சார்பில் பங்கேற்ற, நுவன் இந்திக வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், ஆண்களுக்கான T46 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற பிரதீப் சோமசிறி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியிருந்தார்.
கடந்த பெப்ரவரி 22 ஆம் திகதியன்று ஆரம்பமான இந்த மெய்வல்லுநர் போட்டி நாளையுடன் (03) நிறைவு பெறுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM