அதிவேக வீதிகளுக்காக செலுத்தப்படும் கட்டணங்கள் ஜனவரி முதலாம் திகதி (இன்று முதல்) குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அதிவேக வீதியில் இரவு 9.00 மணிமுதல் அதிகாலை 5.00 மணிவரை பயணிக்கும் வாகனங்களின் கட்டணங்களிலிருந்து 50 ரூபா வரையில் குறைக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி அறிவித்துள்ளதாக அரசாங்க ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த திட்டம் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகளுக்கமைய நடைமுறைப் படுத்தப்படவுள்ளது.

மேலும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் கொழும்பு கட்டுநாயக்க அதிவேக வீதிகளில் குறித்த கட்டண குறைப்புகள் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.