ஈரானிய ஆயுதங்களுடன் படகை கைப்பற்றியதாக பிரிட்டன் தெரிவிப்பு

Published By: Sethu

02 Mar, 2023 | 05:19 PM
image

ஈரானிய ஆயுதங்களைக் கடத்திச் சென்றுகொண்டிருந்த படகு ஒன்றை பிரித்தானிய யுத்த கப்பலொன்று இடைமறித்து ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக பிரித்தானிய அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். 

ஓமான் வளைகுடாவில் அமெரிக்கப் படையினருடன் இணைந்து கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையொன்றின் போது இப்படகு இடைமறிக்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். 

தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் இவற்றில் அடங்கியிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இச்சிறிய படகு இருள்சூழ்ந்த நேரத்தில் சர்வதேச கடற்பகுதியில் வேகமாக சென்றுகொண்டிருப்பது அமெரிக்காவின் வான் கண்காணிப்பு மூலம் முதலில் அவதானிக்கப்பட்டது என ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது. 

ஈரானின் தென் பகுதியிலிருந்து சென்றுகொண்டிருந்த இப்படகு பிரித்தானிய கடற்படையின் எச்எம்எஸ் லன்காஸ்டர் யுத்த கப்பலினால் இடைமறிக்கப்பட்டது எனவும் பின்னர்; ஈரானிய கடற்பகுதிக்கு இப்படகு கொண்டுவரப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தள்ளனர். 

மத்திய தூர ஏவுகணைகள், தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ஆகியனவும் இப்படகில் அடங்கியிருந்ததாகவும் பிரித்தானிய அதிகாரிகள் தெரழிவித்தள்ளனர். 

கடந்த ஜனவரி மாதம் ஈரான் - யேமன் கடல்வழியில் 2000 துப்பாக்கிகளை ஏற்றிச் சென்ற பட ஒன்றை தாம் கைப்பற்றியதாக அமெரிக்க கடற்படை தெரிவித்திருந்தது.

யேமன் தலைநகர் சனாவை ஈரானிய ஆதரவு கொண்ட ஹெளதீ கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். அதையடுத்து சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையினர் யுத்தத்தில் தலையீடு செய்தனர்.  

2022 பெப்ரவரியில் ஹெளதி இயக்கத்துக்கு ஆயுதம் விநியோகிப்பதை ஐநா பாதுகாப்புச் சபை தடை செய்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47