(நா.தனுஜா)
இலங்கையைப் பொறுத்தமட்டில் கடந்த சில வாரகாலமாக அமைதிப்போராட்டங்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துவருகின்றன.
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை என்பது ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு நாட்டினதும் முக்கிய கூறாகும்.
எனவே பொலிஸாரால் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் போராட்டக்காரர்கள் தண்டிக்கப்படுவதை தடுத்துநிறுத்தவேண்டும் என மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவை இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.
அமைதிப்போராட்டங்கள் அரசாங்கத்தினால் ஒடுக்கப்படுகின்றமை தொடர்பில் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப்பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது:
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 'அரகலய இயக்கத்தில்' ஆரம்பித்து தற்போதுவரை ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்டவகையிலான இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
குறிப்பாக ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் எதிராக அரசாங்கம் மிகமோசமான பயங்கரவாதத்தடைச்சட்டத்தைத் தொடர்ச்சியாகப் பிரயோகித்துவருகின்றது.
இருப்பினும் அமைதியான முறையில் ஒன்றுகூடும் உரிமையை மீறிச்செயற்பட்ட பொலிஸாரும், பாதுகாப்புத்தரப்பினரும் தண்டனைகளிலிருந்து தொடர்ந்து விடுபட்டுவருகின்றனர்.
இலங்கையைப் பொறுத்தமட்டில் கடந்த சில வாரகாலமாக அமைதிப்போராட்டங்கள் மீதான அடக்குமுறைகள் அதிகரித்துவருகின்றன.
கடந்த ஜனவரி 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ்மக்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் நடாத்தப்பட்டமை, கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின்போது கஜேந்திரன் உள்ளடங்கலாக 18 பேர் கைதுசெய்யப்பட்டமை, பெப்ரவரி 19 ஆம் திகதி களனி பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேரும் பிக்கு மாணவர்கள் 4 பேரும் கைதுசெய்யப்பட்டமை, பெப்ரவரி 20 ஆம் திகதி எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எதிர்ப்போராட்டத்தின்மீது நீர்த்தாரைப்பிரயோகம் நடாத்தப்பட்டமை, பெப்ரவரி 26 ஆம் திகதி தேசிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப்பிரயோகம் நடாத்தப்பட்டமை ஆகிய சம்பவங்களை அதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.
இவ்வாறானதொரு பின்னணியில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்தை அங்கீகரித்திருக்கும் நாடு என்ற ரீதியில் இலங்கைக்குரிய கடப்பாடுகளை நினைவுறுத்தும் அதேவேளை, அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையை உறுதிப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.
மேலும் பொலிஸாரால் நிகழ்த்தப்படும் அடக்குமுறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் போராட்டக்காரர்கள் தண்டிக்கப்படுவதை நிறுத்தவேண்டும். அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை என்பது ஜனநாயக உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் எந்தவொரு நாட்டினதும் முக்கிய கூறாகும் என்று அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM