லைகா தயாரிக்கும் 'தலைவர் 170'

Published By: Ponmalar

02 Mar, 2023 | 03:22 PM
image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகவிருக்கும் 'தலைவர் 170' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் புதிய திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, அந் நிறுவனத்தின் தலைவரான சுபாஸ்கரனின் பிறந்த நாளான இன்று வெளியிடப்பட்டிருக்கிறது.

'கூட்டத்தில் ஒருத்தன்', 'ஜெய் பீம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதையின் நாயகனாக நடிக்கிறார்.

அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் பணியாற்றும் ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றி விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான '2.0' எனும் திரைப்படத்திலும், ' தர்பார்' எனும் திரைப்படத்திலும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். 

'தலைவர் 170' படத்தின் மூலம் மூன்றாவது முறையாக சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைகா நிறுவனத்துடன் இணைந்திருக்கிறார். சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35