யாழ். நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாள் ஆலய மகோற்சவத்தின் பூந்தொட்டித் திருவிழா

Published By: Ponmalar

02 Mar, 2023 | 01:26 PM
image

யாழ். நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரப்பெருமான் ஆலய மகோற்சவத்தின் பூந்தொட்டித் திருவிழா நேற்று சிறப்பாக இடம்பெற்றது.

இவ் ஆலயத்தில்  வீரபத்திரப்பெருமானின் கொடியேற்ற மகோற்சவம் 26.02.2023 அன்று  மிக பக்திபூர்வமாக  ஆரம்பமாகியது.

கருவறையில் வீற்றிருக்கும் நயினாதீவு தம்பகைப்பதி பத்திரகாளி அம்பாளுக்கும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் இடம்பெற்று  வசந்தமண்டபத்தில் இருந்து உள்வீதியுடாக வலம்வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இவ் மஹோற்சவ கிரியைகளை ஆலய பிரதம குரு வ.குமாரசாமி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார் நடாத்திவைத்தனர்.

இவ்வாலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட மஹோச்சத்தில் எதிர்வரும்  07.03.2023 அன்று இரதோற்சவமும்,08.03.2023 அன்று தீர்த்த உற்சவமும் மாலை கொடியிறக்கத்துடன் இனிதே திருவிழாக்கள் நிறைவடையும்.

இதில் பல பாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு அருட்கடாட்சத்தினை பெற்றுச்சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அல் - ஹாபிழ் அஸ்மி சாலியின்...

2023-05-29 11:35:51
news-image

இளைய தலைமுறை ஆற்றலாளர் விருது 2023

2023-05-29 11:33:01
news-image

புதிய அலை கலை வட்ட இலக்கியப்...

2023-05-29 11:06:54
news-image

தென் இந்திய பண்ணிசை பாவலர்

2023-05-28 17:00:31
news-image

கிழக்கு ஆளுநர் தலைமையில் திருகோணமலையில் தேசிய...

2023-05-28 16:47:31
news-image

மலேசியாவில் பன்னாட்டு வர்த்தகர்கள் மாநாடு :...

2023-05-28 12:46:40
news-image

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொற்றா நோய் தொடர்பான...

2023-05-28 11:50:17
news-image

'இளம் ஆற்றலாளர் விருது' வழங்கும் நிகழ்வு 

2023-05-27 21:42:58
news-image

புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை கோருகிறது இந்திய நாளந்தா...

2023-05-27 21:43:29
news-image

தமிழ் மொழிபெயர்ப்புடன் புனித குர்ஆன் வழங்கும்...

2023-05-27 21:56:26
news-image

முல்லைத்தீவு மாவட்ட பதில் அரசாங்க அதிபராக...

2023-05-27 12:33:55
news-image

கடற்கரை பிரதேசங்களை சுத்திகரிப்பு செய்யும் நிகழ்ச்சி...

2023-05-27 12:19:35