சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாகாது - ஐ.நா.வின் முன்னாள் இராஜதந்திரி மார்க் மலோச்-பிரவுன்

Published By: Vishnu

02 Mar, 2023 | 11:29 AM
image

(நா.தனுஜா)

ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தைக் குறிப்பிடவேண்டாமெனவும், தேர்தலொன்றின் மூலம் தமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் எனவும் ஓப்பன் சொஸைட்டி பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியின் முன்னாள் இராஜதந்திரியுமான மார்க் மலோச்-பிரவுன் வலியுறுத்தியுள்ளார். 

பாராளுமன்றத்தில் கடந்த வாரம் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 'தேர்தலை நடாத்தவேண்டமென எதிர்க்கட்சியில் பலர் எம்மிடம் கூறியிருக்கின்றார்கள்.

தேர்தலை நடாத்துவதற்கான திகதியைத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்னும் தீர்மானிக்கவில்லை. 

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படி எம்மால் பணத்தை அச்சிடமுடியாது' என்று குறிப்பிட்டிருந்தார். 

அதனை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்த வெரிட்டே ரிசேர்ச் அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் நிஷான் டி மெல், 'தேர்தல்களை நடாத்துவதற்கான நிதியை அரசாங்கத்தினால் வழங்கமுடியாமல் இருப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளே காரணமென ஜனாதிபதி கூறுகின்றார். 

தேர்தல்களை நடாத்துவதற்கான நிதியை வழங்குவதற்கு அரச திறைசேரி மறுப்பதன் ஊடாக ஜனநாயகம் நசுக்கப்படும் விவகாரத்தில் சர்வதேச நாணய நிதியம் பலிகடாவாக மாற்றப்படும் சம்பவத்தை இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகின்றேன்' என்று தெரிவித்துள்ளார். 

நிஷான் டி மெல்லின் டுவிட்டர் பதிவை மேற்கோள்காட்டி, உலகளாவிய ரிதீயில் தமது மக்களுக்குப் பொறுப்புக்கூறத்தக்க அரசாங்கத்தைக்கொண்ட ஜனநாயக நாடுகளைக் கட்டியெழுப்புவதை இலக்காகக்கொண்டு பணியாற்றிவரும் ஓப்பன் சொஸைட்டி பவுண்டேஷனின் தலைவரும் ஐக்கிய நாடுகள் சபை, ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித்திட்டம், உலக வங்கி உள்ளிட்ட முக்கிய சர்வதேசக்கட்டமைப்புக்களின் முன்னாள் பிரதிநிதியுமான மார்க் மலோச்-பிரவுன் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார். 

ஜனநாயகத்தை நசுக்குவதற்கான நியாயப்படுத்தலாக சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் ஒருபோதும் அமையாது என்று அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ள மார்க் மலோச்-பிரவுன், தற்போது நாடு மிகமுக்கியமான தருணத்திலுள்ள நிலையில், வாக்களிப்பின் மூலம் தமது தலைவர்களைத் தெரிவுசெய்வதற்கான வாய்ப்பு இலங்கை மக்களுக்கு வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04