வவுனியாவில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் : 100 இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயநிலை !

Published By: Vishnu

01 Mar, 2023 | 04:14 PM
image

வவுனியா நகரில் 20க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 100 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் அபாய நிலமையும் காணப்படுவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பில் கேட்ட போதே அவர்கள் இவ்விடயத்தினை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா நகரப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள், வர்த்தக நிலையங்களைச் சூழவுள்ள பகுதிகள், வர்த்தக நிலையங்களின் முன்னுள்ள வடிகான்கள், வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள காணி, கடையின் மேற்தளம், மேல்மாடிக்குடியிருப்பு,  குளிர்சாதனப்பெட்டியைச் சூழவுள்ள பகுதிகள் போன்ற இடங்களை நீர்தேங்கி டெங்கு நுளம்பு பெருக்கமடையக் கூடிய அபாய நிலை காணப்படுகின்றது. இதனால் அவற்றை தொடர்ச்சியாக சுத்தமாக நீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும்.

வவுனியா நகரின் இப் பகுதிகளில் 20இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களில் தொற்றுக்கு உட்பட்டவர்களாக இனங்காணப்பட்ட போதிலும், 3-5 வரையான நோயாளர்கள் வவுனியா நகரப்பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் பசார் வீதி, மில் வீதி, இறம்பைக்குளம் பகுதி, ஹொரவப்பொத்தான வீதி போன்ற பகுதிகளில் ஏறத்தாழ 4- 6 வரையான வர்த்தக நிலையங்களில் டெங்கு நோய்க்கான பிரதான குடம்பி அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஒரு வர்த்தக நிலையத்தில் நோயாளி ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளார்.

டெங்கு நுளம்பு பெரும் இடங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நோய் பரம்பலைக் கட்டுப்படுத்த பொது மக்களினுடைய ஒத்துழைப்பு அவசியமானது. பொது மக்களினுடைய அக்கறையின்மை தான் இந்த நுளம்பு பெருக்கத்திற்கு காரணமாக இருக்கிறது.

பல தடவை அறிவுறுத்தல் வழங்கியிருந்தும் அவர்களது கவலையீனம் இந்த நுளம்பு உற்பத்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நோயாளர்கள் உருவாகியுள்ளார்கள்.

எனவே தினமும் ஒவ்வொரு குடும்பமும் தமது வீடு, கடை என்பவற்றை சுத்தம் செய்து டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சுகாதார மாநாட்டில் முக்கிய சந்திப்புகள்:...

2026-05-20 15:11:17
news-image

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து...

2026-05-20 15:22:19
news-image

திருகோணமலை - கண்டி வீதியில் வாகன...

2026-05-20 14:53:21
news-image

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள்...

2026-05-20 14:14:27
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2026-05-20 13:48:40
news-image

மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின்...

2026-05-20 13:32:51
news-image

நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு...

2026-05-20 13:12:04
news-image

கச்சத்தீவு மீட்பு விடயத்தை தேர்தல் கால...

2026-05-20 12:28:10
news-image

பொகவந்தலாவையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதி...

2026-05-20 12:44:06
news-image

மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்களை...

2026-05-20 14:51:02
news-image

“பாடசாலை அதிபரை மாற்றவேண்டாம்” - யாழ்....

2026-05-20 12:46:00
news-image

புஸ்ஸல்லாவையில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர்...

2026-05-20 12:33:15