மன்னார் - நானாட்டான் பிரதேசத்தில் பல வீடுகளில் தொடர்ச்சியாக பெறுமதி மிக்க நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடி வந்த நபரை பொலிஸாரின் உதவியுடன் இன்று (1) புதன்கிழமை பொதுமக்கள் மடக்கிப் பிடித்துள்ளனர்.
நானாட்டான் பிரதேசத்தில் உள்ள கிராமங்கள் சிலவற்றில் தொடர்ச்சியாக நீர் இறைக்கும் இயந்திரம் களவாடப்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில் சந்தேகத்தில் அருவி ஆற்றங்கரையில் உள்ள தோட்டம் செய்யும் வீட்டு வளவை சோதனை செய்த போது திருடப்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த முருங்கன் பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்ததுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைதுசெய்யப்பட்ட நபர் இராசமடு அருவி ஆற்றங்கரையில் வசிக்கும் 39 வயது மதிக்கத்தக்க நபர் எனவும் குறித்த நபரிடம் இருந்து மூன்று நீர் இறைக்கும் இயந்திரம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM