பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக போராட்டம் - ஆறு வருடங்களின் பின்னர் தமிழ் பெண்ணிற்கு வெற்றி

Published By: Rajeeban

01 Mar, 2023 | 03:15 PM
image

independent

பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படுவதற்கு எதிராக ஆறு வருடகாலம் போரடிய இலங்கை பெண்ணொருவர் தனது போராட்டத்தில் வெற்றிபெற்றுள்ளார்

66 வயது சுசிட்டா பாலசுப்பிரமணியத்தை பிள்ளைகளை பேரப்பிள்ளைகளை விட்டு இலங்கைக்கு திரும்புமாறு பிரிட்டிஸ் அரசாங்கம்; உத்தரவிட்டிருந்தது.

சமீபத்தில் ஓய்வு பெற்ற அவரது கணவர் சண்முகம் தேவையான வருமான வரம்பை எட்டவில்லை என்பதை காரணம் காட்டி அரசாங்கம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.

இலங்கையின் தமிழர் இனக்குழுவை சேர்ந்தவர் என்பதால் ஒடுக்குமுறைக்குள்ளான நிலையில் அங்கிருந்து தப்பிய சுசிட்டாவின் கணவருக்கு 1994 இல் உள்துறை அமைச்சு அகதி அந்தஸ்த்தை வழங்கியிருந்தது.

அதன் பின்னர் அவரின் நான்கு பிள்ளைகளும் அவருடன் இணைந்துகொண்டனர் அவர்களிற்கும் அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டது.

பின்னர் 2014 இல்  திருமதி பாலசுப்பிரமணியம் மனைவிக்கான விசாவில் அவருடன் இணைந்துகொண்டார்.

பாலசுப்பிரமணியம் தனது ஓய்வூதியத்திற்கு பங்களிப்பு செய்துள்ளதுடன் தனிப்பட்ட சேமிப்பை வைத்திருந்த போதிலும் ஸ்பொன்சர் செய்பவர்  வருமானத்தை கொண்டிருக்கவேண்டும் என உள்துறை அமைச்சு தெரிவிக்கின்றது.

பாலசுப்பிரமணியம் தம்பதியினர் தங்களிற்கு பிள்ளைகளின்ஆதரவுள்ளது என வாதிட்டனர் ஆனால் உள்துறை அமைச்சு அதனை மறுத்துவிட்டது.

எனினும்தற்போது தனது விசாக்களை புதுப்பிக்கவேண்டும் என்ற இரண்டு விண்ணபங்கள், உள்துறை அமைச்சிற்கு எதிரான இரண்டு மேல்முறையீடுகள் போன்றவற்றின் காரணமாக  திருமதி பாலசுப்பிரமணியம் பிரிட்டனில் தங்கியிருப்பதற்கான அனுமதி  வழங்கப்பட்டுள்ளது.

இறுதியில்எனக்கு நீதி கிடைத்துள்ளது  குறித்து நான் மிகவும்நிம்மதி அடைகி;ன்றேன் நான் பல உறக்கமற்றஇரவுகளை அனுபவித்துள்ளேன்,உடல் நிலை பாதிக்கப்பட்டது என தெரிவித்துள்ள திருமதி பாலசுப்பிரமணியம் உள்துறை அமைச்சின் உணர்வற்ற தன்மை காரணமாக தொடர்ச்சியாக முட்டுக்கட்டை நிலையில் இருந்ததால் பதற்றமான நிலையில் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எனது கணவர் பல வருடங்களாக பிரிட்டனில் பணியாற்றினார்,அவர் ஓய்வுதீயம் பெறுகி;ன்றார்,எனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் நல்ல நிலையில் உள்ளனர் என தெரிவித்த அவர் எனினும் எனது கணவர் ஓய்வுபெற்றதன் காரணமாக நான் விசாவை  புதுப்பிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன் எனவும் குறிப்பிட்டார்.

விதிமுறைகளில் நெகிழ்வு இல்லாததன் காரணமாக எனது வாழ்க்கையின் எஞ்சிய காலங்களை அமைதியாக கழிப்பதற்காக நான் நீதிக்காக போராடநேர்ந்தது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த காலத்தில் எனது கணவர் ஒய்வுபெறவேண்டிய நிலையேற்பட்டதால் நான் தண்டிக்கப்படுவதாக நான் உணர்ந்தேன்,ஆனால் எனது சட்டத்தரணியின் உதவியுடன் நான் இறுதியாக நீதியை பெற்றுள்ளேன் எனக்குள்ளே நான் எப்போதும் உறுதியாக காணப்பட்டேன் எனவும் திருமதி பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

எனது சட்டத்தரணி எனக்கு நம்பமுடியாத ஆதரவை வழங்கினார் எனக்காக நீதிமன்றம் சென்றதுடன்மாத்திரமல்லாமல் நான் நம்பிக்கை இழந்தபோதெல்லாம்என்னை உறுதியுடன்வைத்திருந்தார்எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாலசுப்பிரமணியம் தம்பதியினர் தங்களது 35 மகனின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர்,தமிழ் கலாச்சாரத்தின்அடிப்படையில் தங்கள் பேரப்பிள்ளைகளை பராமரித்துள்ளனர்.

எனினும் 2016 இல்திருமதி பாலசுப்பிரமணியம்  தனது விசாவை புதுப்பிப்பதற்காக விண்ணப்பித்தவேளை உள்துறை அமைச்சு அவரது கணவர் தற்போது ஓய்வு பெற்றுவிட்டார் என தெரிவித்து விசாவை வழங்க மறுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22