(எம்.மனோசித்ரா)
அரசாங்கத்தின் புதிய வரிக்கொள்கைக்கு எதிராக தேசிய எதிர்ப்பு தினத்தை பிரகடனப்படுத்தி , சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று புதன்கிழமை முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஊழியர்களின் பங்கேற்பு மிகக் குறைவாகவே காணப்பட்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு வைத்தியர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் , அரச நிர்வாக அதிகாரிகள் , வங்கி ஊழியர்கள் , துறைமுக ஊழியர்கள் , பெற்றோலியத்துறை ஊழியர்கள் , நீர் வழங்கல் துறை ஊழியர்கள் உள்ளிட்ட அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் துறையைச் சேர்ந்தவர்கள் ஆதரவளிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கு மேல், வடமத்திய , தென் , மத்திய , கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த 50 சதவீதத்திற்கும் குறைவான ஊழியர்களின் பங்களிப்பே கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த 6 மாகாணங்களிலும் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்த துறைகளைச் சேர்ந்தவர்களினதும் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 48,461 ஆகும். எவ்வாறிருப்பினும் இவர்களில் 44 ஆயிரத்து 671 பேர் மாத்திரமே இதற்கு ஆதரவளித்துள்ளனர்.
அதற்கமைய ஒரு இலட்சத்து 3,780 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. அந்த மாகாணங்களில் சேவைக்காக சமூகமளித்திருந்த ஊழியர்களின் எண்ணிக்கை குறித்து ஆராய்ந்த போதே இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM