ஊழியர்களின் சம்பளத்தில் அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிராக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசாங்க வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதனால் அரச வங்கிகள் மூடிய நிலையில் காட்சியளிப்பதுடன் தூர இடங்களிலிருந்து வருகை தரும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை நியாயமற்ற வரிக்கொள்கை, மருந்துகள் தட்டுப்பாடு மற்றும் பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் மாவட்டத்திலும் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் வெளிநோயாளர் பிரிவு இயங்காது இருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. இதனால் வெளிநோயாளர் பிரிவு வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது.
இந்த நிலையில் தூர இடங்களில் இருந்து வருகை தந்த நோயாளிகளும் அசௌகரியங்களுக்குள்ளாகிய நிலையில் திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM