அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முறைக்கேடுகள் தொடர்பாக ரஷ்ய அதிகாரிகள் 35 பேர் அமெரிக்காவிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டிருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் செயற்பாடுகளை ரஷ்யா மேற்கொள்ளாது என அந்நாட்டு ஜனாதிபதி விளாமிதிர் புட்டின் கூறிய கருத்தை அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொணால்ட் டிரம்ப் பாரட்டியுள்ளார்.  

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது ஜனநாயக கட்சி வேட்பாளரான ஹிலாரிகின்டனின் பிரச்சாரங்கள் தொடர்பான மின்னஞ்சல்களை இணையவழி மோசடியூடாக களவாடி தரவுகளை விக்கிலீக்ஸ் மையத்திற்கு பறிமாறிய விடயத்தில் ரஷ்ய அதிகாரிகளே முன்னின்று செயற்பட்டனர் என்றும், இதற்கு காரணம் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை வெற்றிப்பெறச் செய்வதே என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

 இந்நிலையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த ரஷ்ய அதிகாரிகள் அமெரிக்காவை விட்டு 72 மணித்தியாலயங்களுக்குள் வெளியேற வேண்டும் என ஓபாமா அறிவித்திருந்தார். அத்தோடு மேரிலாந்து மற்றும் நியூயோர்க்கில் அமைந்துள்ள ரஷ்ய தூதரங்களை மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளார்.

 அமெரிக்காவின் குறித்த பழிவாங்கல் நடவடிக்கைக்கு பதிலாக நாங்கள் எதுவும் செய்யப்போவதில்லை எனவும், மாறாக அடுத்த ஜனாதிபதி பதவியேற்றவுடன் ரஷ்யா தனது நிலைபாட்டை அறிவிக்கும் என்றும் அந்நாட்டு அறிக்கையில் ஜனாதிபதி புட்டின் குறிப்பிட்டுள்ளார்.  

குறித்த தீர்மானம் தொடர்பாக தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ள டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதியின் முடிவு பாராட்டப்படக்கூடியது எனும் வகையிலான கருத்தை பதிவு செய்துள்ளார்.  

டிரம்பின் இச்செயற்பாடுகள் எதிர்கால ரஷ்ய அமெரிக்க கூட்டணிகளுக்கு வாய்ப்பாக அமையும் என்பதோடு ஒரு நாகரீகமான அரசியல் களத்தை உருவாக்கும் என அரசியல் கருத்தாளர்கள் சமூவலைத்தளங்கள் ஊடாக கருத்து பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.