மஹிந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வர ஒரு போதும் மக்கள் இடமளிக்கமாட்டார்கள். மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற மோசடிகள், ஜனநாயக விரோத செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள் என ஜே.வி.பி.யின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

2017ஆம் ஆண்டில் ஆட்சியைக் கவிழ்ப்போம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பிலுள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்தபோது தெரிவித்தமை தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.