கம்போடியாவில் மனிதர்களிலிருந்து மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் தொற்றுவதாக கண்டுபிடிக்கப்படவில்லை என அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கம்போடியாவில் கடந்த புதன்கிழமை 11 வதான ஒரு சிறுமி பறவைக் காய்ச்சலினால் உயிரிழந்தாள். 2 நாட்களின் பின், அச்சிறுமியின் தந்தைக்கும் பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால், மனிதர்களிலிருந்து மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் வைரஸ் தொற்றும் சாத்தியம் குறித்து உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் கவலை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மேற்படி சிறுமிக்கும் அவளின் தந்தைக்கும் பறவைகளிலிருந்தே தொற்று ஏற்பட்டிருந்ததாக கம்போடியாவின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
49 வயதான மேற்படி தந்தையிடம் நோய்க்கான அறிகுறிகள் காணப்படவில்லை எனவும், குணமடைந்துள்ள அவர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கம்போடியாவில் பறவைக்காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்றில்... (AFP photo)
மனிதர்களுக்கு பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்படுவது அரிதாகும். தொற்றுக்கு உள்ளான பெரும்பாலானோருக்கு பறவைகளிலிருந்தே தொற்று ஏற்படுகிறது.
கடந்த 2 தசாப்தங்களில் உலகில் சுமார் 900 பேருக்கு H5N1 எனும் பறவைக்காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 450 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM