மேற்­கிந்­தியத் தீவு­க­ளுக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் கிரிக்கெட் போட்­டியில் 177ஓட்­டங்­களால் வெற்றி பெற்ற அவுஸ்­தி­ரே­லியா தொட­ரையும் கைப்­பற்­றி­யுள்­ளது.

அவு­ஸ்தி­ரே­லிய மற்றும் மேற்­கிந்தியத் தீவுகள் அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட்­போட்டி மெல்பேர்ன் மைதா­னத்தில் நடை­பெற்­றி­ருந்­தது.

நாண­யச்­சு­ழற்­சியில் வெற்றி பெற்­றி­ருந்த அவுஸ்­தி­ரே­லியா முதல் இன்­னிங்ஸில் 3 விக்­கெட்­டுக்­களை இழந்து ஜோ போர்ன்ஸ்(128), உஸ்மான் ஹவாஜா(144), அணித்­த­லைவர் ஸ்டீபன் ஸ்மித்(134), அடம் வோக்ஸ்(106) ஆகி­யோரின் பங்­க­ளிப்­போடு 551 ஓட்­டங்­களை குவித்து ஆட்­டத்தை இடை­நி­றுத்­தி­யது.

பதி­லுக்கு துடுப்­பெ­டுத்­தா­டிய மேற்­கிந்­தியத் தீவுகள் தனது முதல் இன்­னிங்ஸில் சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்து 271 ஓட்­டங்­களை பெற்­றது. 280 ஓட்­டங்கள் முன்­னி­லை­யுடன் இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த அவுஸ்­தி­ரே­லியா நேற்று முன்­தினம் 3ஆவது நாள் ஆட்­டத்தின் முடிவில் மூன்று விக்­கெட்­டுக்­களை இழந்த நிலையில் 179 ஓட்­டங்­களை பெற்று ஆட்­டத்தை நிறுத்­திக்­கொண்­டது.

இந்­நி­லையில் 460 ஓட்­டங்­களை வெற்றி இலக்­காக கொண்டு இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த மேற்­கிந்­தியா 282 ஓட்­டங்­களை மட்­டுமே பெற்று சகல விக்­கெட்­டுக்­க­ளையும் இழந்­தது. அவ்­வ­ணியில் அதி­க­பட்­ச­மாக ராம்டின் 59 ஓட்­டங்­க­ளையும் அணித்­த­லைவர் ஹோல்டர் 68 ஓட்­டங்­க­ளையும் எடுத்­தனர். அவுஸ்­தி­ரே­லிய அணி சார்­பாக ஜேம்ஸ் பட்­ரின்சன்(2), நெதன் லயன்(3), மிச்சல் மார்ஷ்(4) அப­ார­மாக பந்து வீசி­யி­ருந்­தனர்.

மூன்று போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அவுஸ்­தி­ரே­லியா 2-–0 என்ற கணக்கில் தொடரை கைப்­பற்­றி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.