(இராஜதுரை ஹஷான்)
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு திகதியை மூன்றுவார காலத்திற்குள் உட்பட்ட தினத்தில் அறிவிக்குமாறு ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம்.ஜனநாயகத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுவது குற்றமா,என்பதை நாட்டு மக்கள் தீர்மானிக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் இன்று (28) செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஆணைக்குழுவுடன் விசேட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.எதிர்வரும் 09ஆம் திகதி இடம்பெறவிருந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டு, 3 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அறிவிக்கவுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் தேர்தல் திகதி பிற்போடப்படுமாயின் நிர்ணயிக்கப்பட்ட திகதியில் இருந்து 21 நாட்களுக்குள் அதாவது மூன்று வார காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும்,ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை நடத்தும் திகதியை இந்த 21 நாட்களுக்குள் நிர்ணயிக்குமாறு ஆணைக்குழுவிடம் வலியுறுத்தினோம்.
தேர்தல் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் திட்டமிட்ட வகையில் இடையூறு விளைவித்துள்ளது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அப்பாற்பட்ட வகையில் நிறைவேற்றுத்துறை ,திறைச்சேரி செயலாளர் மற்றும் அரச அச்சகத் திணைக்கள தலைவர் செயற்பட முடியாது,ஆகவே தேர்தல்கள் ஆணைக்குழு அரசியலமைப்பினால் வழங்கப்பட்ட அதிகாரத்தை உச்சபட்சமாக பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினோம்.
நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்த பகுதிகளுக்கு செலவதற்கு போராட்டத்தை ஒன்று கூட்டவில்லை.விகாரமாதேவி பூங்காவில் இருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை செல்வதற்கு பேரணியாக சென்றோம். நீதிமன்றத் தடையுத்தரவில் கோட்டை புகையிரத நிலையம் உள்வாங்கப்படவில்லை,அமைதியான போராட்டத்தை பொலிஸாரே அமைதியற்ற போராட்டமாக மாற்றியமைத்தார்கள்.
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமைகளை அரசாங்கம் முடக்கும் போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீதிக்க இறங்கி போராட்டத்தில் ஈடுபடுவது குற்றமா,இதனை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.
போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள் மீது பொலிஸார் மிலேட்சத்தனமான தாக்குதல்களை முன்னெடுத்தார்கள். அமைதியான போராட்டம் அமைதியற்ற போராட்டமாக மாற்றியமைக்கப்பட்டதால் எமது கட்சியின் வேட்பாளர் நிமல் அமரசிறி உயிரிழந்துள்ளார், இதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM