அரிசி உற்பத்தி, விற்பனையின் போதான சமூக பாதுகாப்பு வரியை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானம்

Published By: Vishnu

28 Feb, 2023 | 10:32 PM
image

(எம்.மனோசித்ரா)

நெல் விவசாயிக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் அரசாங்கத்தால் ஒருகிலோ நாடு நெல் 100 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்பட்டு குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு இலவசமாக விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஒரு கிலோ நெல்லுக்கு விவசாயிக்கு செலுத்தப்படுகின்ற பணத்திற்கு மேலதிகமாக அரிசி உற்பத்தி செயன்முறையில் ஒரு கிலோ அரிசியை நுகர்வோருக்கு வழங்கும் வரைக்குமான நீர்க்கட்டணம், மின்சாரக்கட்டணம், களஞ்சிய வசதிகள், போக்குவரத்து போன்ற மேலதிக செலவுகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால், அதற்கு மேலதிகமாக சமூகப் பாதுகாப்பு வரியாக ஒருகிலோ அரிசிக்கு 6 - 7 ரூபாவை செலுத்த வேண்டியிருக்கின்றமையை அரிசி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறித்த செலவைக் குறைத்துக் கொள்வதற்காக ஓரளவு சலுகையை வழங்க முடியுமாயின் விவசாயிகளுக்கு அதிக விலையை வழங்க முடியுமென மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, சந்தையில் தற்போது நிலவுகின்ற அரிசியின் விலையை அவ்வாறே பேணிக்கொண்டு, ஒருகிலோ நாடு நெல்லுக்கு 100 ரூபாவுக்கு அதிகமான விலையை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு இயலுமாகும் வகையிலும் நெற் கொள்வனவு, அரிசி உற்பத்தி, மற்றும் விற்பனையின் போதான சமூகப் பாதுகாப்பு வரியை நீக்குவதற்காக 2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு அறவீட்டு சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22