மட்டக்களப்பு மாவட்டத்தில் 20 மேற்பட்ட வீடுகளை உடைத்து கொள்ளையிட்டு வந்த மட்டு கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய கொள்ளையன் ஒருவரை 27 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு அக்கரைப்பற்றில் வைத்து கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வீடு ஒன்றை உடைத்து அங்கிருந்து 54 பவுண் தங்க ஆபரணங்கள் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில் குறித்த கொள்ளையனை அக்கரைப்பற்று பகுதியில் வைத்த பொலிசார் கைது செய்தனர்.
குறித்த நபர் மட்ட கல்லடி வேலூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் கிளிநொச்சி உட்பட பல இடங்களில் திருமணம் முடித்துள்ளதாகவும் மட்டக்களப்பில் இரு கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்ததுடன் ஏறாவூரில், காத்தான்குடி, வாழைச்சேனை, அம்பாறை ஆலையடிவேம்பு, கிளிநொச்சி, பொலிஸ் பிரிவுகளில் 20 வீடுகளுக்கு மேல் உடைத்து கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் நீண்டகாலமாக தலைமறைவாகிவந்த நிலையில் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இதில் கைது செய்யப்பட்டவரை இன்று அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM