இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டி இடம்பெற்ற போர்ட் எலிசபத் மைதானத்தை சுழற்பந்து வீச்சுக்கு எதிராக  தென்னாபிரிக்க அணி மாற்றியமைத்துள்ளது.

இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மைதானங்களில் சிறப்பாக பந்துவீசக்கூடியவர்.

ஆஸி அணிக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் அதிகமான விக்கட்டுகளையும் அவரே கைப்பற்றியிருந்தார்.

இதனை கருத்திற்கொண்டு மைதானத்தை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமற்றவாறு மாற்றியமைக்கும்படி தென்னாபிரிக்க கோரியுள்ளது.

இதன்படி போட்டி நடந்த 5 நாட்களுக்கும் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக தென்னாபிரிக்க அணித்தலைவர் மைதான பராமரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.