(எம்.மனோசித்ரா)
மின் கலத்தில் இயங்கும் பேரூந்துகளை பயன்படுத்துவதற்காக அரச - தனியார் பங்குடைமை கருத்திட்டத்தை முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
சர்வதேச வலுசக்தி நெருக்கடியின் மத்தியில் சுவட்டு எரிபொருள் இறக்குமதிக்கான செலவுகளைக் குறைப்பதற்கான ஒரு படிமுறையாக மீள்புதிப்பிக்கத்தக்க வலுசக்தி ஆற்றல் வளங்களான சூரியசக்தியைப் பயன்படுத்தி பயணிக்கக்கூடிய பேரூந்துகளை அறிமுகப்படுத்துவது மிகவும் பொருத்தமாக அமையுமெனக் கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, கொழும்பு வர்த்தக நகரம் மற்றும் கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு, மேல்மாகாணத்தை உள்ளடக்கிய வகையில்,
இலங்கை பயணிகள் போக்குவரத்து சபைக்கு மின்னேற்றப்பட்ட மின்கலத்தில் இயங்குகின்ற பேரூந்துகளைப் பயன்படுத்துவதற்காக அரச - தனியார் பங்குடமைக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனையைக் கருத்தில் கொண்டு, முதன்மையாக முறையான சாத்தியவள கற்கையின் அடிப்படையில் முன்னோடிக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM