கஸக்ஸ்தானின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் அமெரிக்கா ஆதரிக்கும் என அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கன் இன்று கூறியுள்ளார்.
மத்திய ஆசிய நாடான கஸக்ஸ்தான், சோவியத் ஒன்றியத்தின் முன்னாள் குடியரசாகும். ரஷ்யாவுடன், கஸக்ஸ்தான், 7644 கிலோமீற்றர் எல்லையைக் கொண்டுள்ளது. சீனாவுடனும் அது எல்லையைக் கொண்டுள்ளது.
ரஷ்யாவுடன் பாரம்பரிய உறவுகளைக் கொண்டுள்ள கஸக்ஸ்தான், உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பினால் கவலையடைந்துள்ளது.
இந்நிலையில், அன்டனி பிளின்கன் கஸக்ஸ்தானுக்கு விஜயம் செய்துள்ளார். கஸக்ஸ்தானின் தலைநகர் அஸ்டானாவில் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது பிளின்கன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
'கஸக்ஸ்தானின் இறையாண்மை, சுதந்திரம், பிராந்திய ஒருமைப்பாட்டை அமெரிக்கா வலுவாக ஆதரிக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்' என அவர் கூறியுள்ளார்
கஸக்ஸ்தானின் ஜனாதிபதி காசிம் ஜோம்ரத் தோகாயேவையும் அவர் சந்தித்தார். கஸக்ஸ்தானின் இறையாண்மைக்கு அமெரிக்கா அளிக்கும் ஆதரவுக்காக ஜனாதிபதி தோகாயேவ் பாராட்டினார்.
மற்றொரு மத்திய ஆசிய நாடான உஸ்பெகிஸ்தானுக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார்.
கஸக்ஸ்தானின் உறவுகளை வலுப்படுத்துவதில் கடந்த சில வருடங்களில் அமெரிக்கா முக்கிய முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும், மத்திய ஆசிய நாடுகளுடன் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் நடைமுறை சாத்தியமான வழிகளை அமெரிக்கா ஆராய்வதாகவும் பிளின்கன் கூறினார். கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான் ஆகியனவும் இந்நாடுகளில் அடங்கும்.
முன்னாள் சோவியத் குடியரசான பெலாரஸ், யுக்ரைன் யுத்தத்தில் ரஷ்யாவை ஆதரிக்கிறது.
ஆனால், மத்திய ஆசியாவிலுள்ள முன்னாள் சோவியத் குடியரசுகளான கஸக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துருக்மேனிஸ்தான் ஆகியன யுக்ரைன் யுத்தம் தொடர்பல் ரஷ்யாவை ஆதரிக்கவில்லை.
இந்த யுத்தத்தில் ரஷ்யாவை ஆதரிக்கவில்லை. உக்ரேனிலிருந்து ரஷ்யப் படையினர் வெளியேற வேண்டும் என ஐநா பொதுச் சபையில் அண்மைணில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பின்போது, மேற்படி 5 மத்திய ஆசிய நாடுகளும் வாக்களிப்பை தவிர்த்தன. ஆனால், ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் வாக்களித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM