கண் சத்திரசிகிச்சைகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்த அவுஸ்திரேலியாவிடமிருந்து நிதியுதவி

Published By: Vishnu

28 Feb, 2023 | 04:02 PM
image

(எம்.மனோசித்ரா)

பதுளை, இரத்தினபுரி , மட்டக்களப்பு, களுபோவில, தங்காலை வைத்தியசாலைகளில் கண் சத்திரசிகிச்சைகளுக்கான நவீன வசதிகளை மேம்படுத்த அவுஸ்திரேலியாவிடமிருந்து 99.42 மில்லியன் ரூபா நிதியுதவியைப் பெற்றுக் கொள்ள அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் 'அனைவருக்கும் பார்வை' சமுதாயக் கருத்திட்ட நிறுவனத்தால் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட மருத்துவமனைகளில் கண் சிகிச்சை அலகுகளுக்கு மருத்துவ மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களை நன்கொடையாக வழங்குவதற்கும், மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் திறன் விருத்திக்கு உதவி வழங்குவதற்கும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பதுளை மாகாண பொது மருத்துவமனை, இரத்தினபுரி, மட்டக்களப்பு மற்றும் களுபோவில போன்ற போதனா மருத்துவமனைகள் மற்றும் தங்காலை ஆதார மருத்துவமனையில் கண் சத்திரசிகிச்சைக்குத் தேவையான நவீன வசதிகளைக் கருத்தில் கொண்டு, பிராந்திய கண் சிகிச்சை அலகுகளில் கண் சுகாதார ஊழியர்களின் திறன் விருத்தியை ஏற்படுத்துவதற்கும், மற்றும் உபகரணங்களை மேம்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருத்திட்டத்தின் கீழ் 99.42 மில்லியன் ரூபா கிடைக்கப் பெறவுள்ளது.  

அதற்கமைய, உத்தேசிக்கப்பட்டுள்ள வழங்கலைப் பெற்றுக் கொள்வதற்காக அவுஸ்திரேலியாவின் 'அனைவருக்கும் பார்வை' சமுதாயக் கருத்திட்ட நிறுவனம் மற்றும் சுகாதார அமைச்சுக்கும் இடையிலான  உடன்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58