மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 மீனவர்களை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட போது இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் பயன்படுத்திய படகு மற்றும் வலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.