கொரோனா வைரஸின் மூலம் தொடர்பில் சீனா நேர்மையாக இருக்க வேண்டும் என சீனாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கூறியுள்ளார்.
சீனாவின் வுஹான் நகரிலுள்ள ஆய்வுகூடமொன்றிலிருந்து கொரோனா வைரஸ் வெளிவந்திருக்கலாம் என அமெரிக்காவின் வலுசக்தி முகவரகத்தின் இரகசிய அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியான ஒரு நாளின் பின்னர் சீனாவுக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கலஸ் பேர்ன்ஸ் இவ்வாறு கூறியுள்ளார்.
ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா வெளிவரவில்லை என சீனா கூறுகிறது.
இந்த வைரஸ் பரவல் தொடர்பில் அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்களிடையே வித்தியாசமான கருத்துகள் உள்ளன.
கொரோனா வைரஸ் இயற்கையாக மனிதர்களுக்கு தொற்றியிருக்கலாம் என அமெரிக்காவின் 6 தேசிய புலனாய்வு நிறுவனங்களில் 4 நிறுவனங்கள் கருதுகின்றன.
ஆனால், இந்த வைரஸ் ஆய்வுகூடத்திலிருந்து வெளிவந்திருக்கலாம் என தான் நம்புவதாக 2021 ஆம் ஆண்டு எவ்பிஐ கூறியிருந்தது.
இது தொடர்பில் உறுதியான தீர்மானம் இல்லை என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு பேச்சாளர் ஜோன் கேர்பி நேற்று கூறியிருந்தார்.
கொரோனா வைரஸ் மூலம் பரவும் கொவிட்19 தொற்று நோயினால் உலகில் சுமார் 68 லட்சம் பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்தி
சீன ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா பரவியிலிருக்கலாம்: அமெரிக்க வலுசக்தி முகவரகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM