விஜய் அண்டனியின் 'பிச்சைக்காரன் 2' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 5

28 Feb, 2023 | 02:35 PM
image

இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் அண்டனி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என பல பொறுப்புகளை கடந்து, தற்போது இயக்குநர் எனும் பொறுப்பினையும் முதன் முறையாக ஏற்றிருக்கும் விஜய் அண்டனி, இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் 'பிச்சைக்காரன் 2'. இதில் விஜய் அண்டனி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை காவ்யா தாப்பர் நடித்திருக்கிறார்.

இவர்களுடன் நடிகை ரித்திகா சிங், மன்சூர் அலிகான், ராதாரவி, ஜோன் விஜய், ஹரிஷ் பெராடி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஓம் நாராயணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஜய் அண்டனி இசையமைத்திருக்கிறார். 

'பிச்சைக்காரன்' படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகும் இந்த திரைப்படத்தை விஜய் அண்டனி ஃபிலிம் கொர்ப்பரேஷன் பட நிறுவனம் சார்பில் திருமதி ஃபாத்திமா விஜய் அண்டனி தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகள் வெளியிடப்பட்டு, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

இதனிடையே நடிகர் விஜய் அண்டனி நடிப்பில் கடந்த ஆண்டில் எந்த திரைப்படங்களும் வெளியாகவில்லை என்பதாலும், இதனால் அவருடைய சந்தை மதிப்பு அவதானிக்க இயலவில்லை என்பதாலும், அவருடைய நடிப்பில் தயாரான ஆறு திரைப்படங்கள் வெளியாகவில்லை. 

இந்நிலையில் திரையுலகில் தனக்கு ஏற்பட்டிருக்கும் தேக்க நிலையை உடைக்கும் வகையில், அவரே தயாரித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கியிருக்கும் 'பிச்சைக்காரன் 2' படத்தை சொந்தமாக வெளியிடுகிறார். 

இந்தத் திரைப்படத்தின் வெற்றியை பொறுத்தே அவரது நடிப்பில் தயாரான வேறு படங்கள் வெளியாகும் என திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'எறும்பு' திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வெளியீடு

2023-06-01 17:02:25
news-image

'டக்கர்' அதிவேகமான திரைக்கதை - நடிகர்...

2023-06-01 14:05:31
news-image

இளைய தலைமுறையினரைக் கவருமா சித்தார்த்தின் ‘டக்கர்’..?

2023-06-01 12:03:24
news-image

சுனைனா நடிக்கும் 'ரெஜினா' பட டீசர்...

2023-06-01 11:31:49
news-image

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட ‘போர் தொழில்’படத்தின் முன்னோட்டம்

2023-05-31 14:32:35
news-image

நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கும் 'பெல்'

2023-05-31 10:47:00
news-image

நடிகை அஞ்சலி நடிக்கும் 'ஈகை' பட...

2023-05-30 12:43:42
news-image

‘எல். ஜி. எம்' படத்தின் செகண்ட்...

2023-05-30 12:37:36
news-image

'வீரன்' படத்தில் நடித்ததை விட கற்றது...

2023-05-30 12:37:09
news-image

அஜித் குமாருக்கு ஜோடியாகிறாரா திரிஷா...!?

2023-05-30 12:34:40
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51