மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வரவிருந்த 4 விமானங்கள் இதுவரையில் வந்தடையவில்லையென கட்டுநாயக்க விமானநிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

மத்தியகிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பனிமூட்டம் காரணமாக குறித்த விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 3.05, 3.55, 4.25 மற்றும் 5.25 போன்ற நேரங்களுக்கு வரவேண்டிய விமானங்களே இவ்வாறு தாமதமாகியுள்ளன.

குறித்த விமானங்களின் தாமதத்தால் பயணிகள் கடும் சிரமத்துக்கு முகங்கொடுத்துள்ளனர்.