நடிகர் வெற்றி நடிக்கும் 'மெமோரீஸ்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

Published By: Digital Desk 5

28 Feb, 2023 | 03:08 PM
image

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் வெற்றி கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மெமோரீஸ்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஷியாம் பிரவீன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'மெமோரீஸ்'. இதில் வெற்றி, பார்வதி அருண், ஹரிஷ் பெராடி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

அர்மோ மற்றும் கிரண் நுப்தியால் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கவாஸ்கர் அவினாஷ் இசையமைத்திருக்கிறார்.

மர்டர் மிஸ்டரி திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சிஜு தமீன்ஸ் ஃபிலிம் பேக்டரி பிரைவேட் லிமிடெட் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சிஜு தமீன்ஸ் தயாரித்திருக்கிறார். 

இப்படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் மார்ச் மாதம் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right