வளர்ந்து வரும் நடிகரான குணா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கேங்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தீனதயாளன் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'கேங்'. இதில் நடிகர் குணா முதன்முறையாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக மும்பை மொடலிங் மங்கை தாமினி தேவ் நடிக்கிறார்.
பெருமாள் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டோனி பிரிட்டோ இசையமைத்திருக்கிறார். பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி ஆர் கிரியேஷன்ஸ், சிம்ஹா புரொடக்ஷன்ஸ், அண்ணாமலை புரொடக்ஷன்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இந்தத் திரைப்படம் திரைக்கு வரும் முன்னரே சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு பற்றி நான்கு சர்வதேச விருதுகளை வென்றிருக்கிறது. சிறிய பட்ஜட் படங்கள் சர்வதேச அளவிலான திரைப்பட விருதுகளை வென்ற பிறகு, தமிழ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் தயாராகி இருக்கும் 'கேங்' திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் என அவதானிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM