பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணங்களும் அறிகுறிகளும் என்ன ?

Published By: Digital Desk 5

28 Feb, 2023 | 01:59 PM
image

ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் மூன்றில் ஒருவருக்கும், இருப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்களில் நான்கில் ஒருவருக்கும் பக்கவாத பாதிப்பு ஏற்படுவதாக அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 

இதனுடன் பக்கவாத பாதிப்பின் தொடக்கநிலை அறிகுறிகளை எம்மில் பலரும் துல்லியமாக அவதானிக்க இயலாததால், இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

இந்நிலையில் பக்கவாதம் ஏற்படுவதற்கான தொடக்க நிலை அறிகுறிகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் மருத்துவ நிபுணர்கள் பின்வருமாறு விளக்கமளிக்கிறார்கள்.

மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படுவதன் காரணமாகவும், மூளையில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தக் கசிவு ஏற்படுவதன் காரணமாகவும், 'இஸ்கிமிக் ஸ்ட்ரோக்', 'ஹெமராஜிக் ஸ்ட்ரோக்', 'அக்யுட் இஸ்கிமிக் அட்டாக்' ஆகிய பக்கவாத பாதிப்பு ஏற்படுகிறது. 

இவை அனைத்தும் மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதன் பிறகு உண்டாகும் பாதிப்புகளாகும். ஆனால் இதற்கு முன்னதாக சிலருக்கு கண்களில் கருப்பு விழுந்தது போன்றும், பார்வையில் திரை ஏற்பட்டிருப்பது போன்றும் அறிகுறிகளை வெளிப்படுத்தும். 

வேறு சிலருக்கு ஒன்று முதல் மூன்று அல்லது நான்கு விநாடிகள் வரை நினைவுத்திறன் இழப்பு பாதிப்பு ஏற்படும். வேறு சிலருக்கு பார்வையில் சில வினாடிகள் வரை தடுமாற்றமும், வேறு சிலருக்கு தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும்போது பேச்சில் தடை அல்லது குளறலுடன் கூடிய தெளிவின்மை ஏற்படும். 

பணியிட சூழலில் தொடர்ச்சியாக பணியாற்றும்போது வலது அல்லது இடது கை சில வினாடிகளுக்கு இயங்காதிருக்கும். அதே போல் வேறு சிலருக்கு கால்கள் இயங்க மறுத்திருக்கும். 

இதுபோன்ற நுட்பமான அறிகுறிகள் வெளிப்படும் தருணத்தில் துல்லியமாக அவதானித்தால், பக்கவாத பாதிப்பு ஏற்படாமல் தடுக்க இயலும். இத்தகைய அறிகுறிகளை சோர்வு அல்லது அலைச்சல் என கருதி, அலட்சியப்படுத்தினால் திடீரென்று பக்கவாத பாதிப்பு ஏற்படக்கூடும்.

இதயத்திலிருந்து ரத்த நாளங்கள் வழியாக செல்லும் குருதியில் இரத்தத் துகள்கள் மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் அடைப்புகளை ஏற்படுத்தலாம். வேறு சிலருக்கு மூளையில் உள்ள சிறிய ரத்தக் குழாய்கள், இரத்தத் துகள்களால் அடைக்கப்பட்டு, அவற்றின் காரணமாகவும் பக்கவாத பாதிப்பை உண்டாக்கலாம். 

வேறு சிலருக்கு அதாவது முப்பது சதவீத மக்களுக்கு கழுத்து வழியாக மூளைக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பின் காரணமாக.. அவர்களுக்கு பக்கவாத பாதிப்பு உண்டாகிறது. நீரிழிவு நோய், உயர் குருதி அழுத்த பாதிப்பு, கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவு அதிகரித்தவ் இவற்றின் காரணமாகவும் கழுத்தில் உள்ள ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படக்கூடும்.

இதனால் பக்கவாத பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள், தங்களது மருத்துவ நிபுணரிடம். பக்கவாத பாதிப்பின் காரணத்தை துல்லியமாக தெரிந்து கொண்டு, அதற்கான சிகிச்சையையும், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிமுறையை உறுதியாக கடைப்பிடிக்க வேண்டும். 

பக்கவாத பாதிப்பு, கழுத்தில் உள்ள ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருப்பதால்தான் உருவானது என மருத்துவ பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், அதனை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றுவதுதான் சிறந்தது. தற்போது இத்தகைய சத்திர சிகிச்சை நுண்துளை சத்திர சிகிச்சையின் மூலம் மேற்கொள்ளப்படுவதால், பக்கவாத பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் தடுக்க இயலும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

டொக்டர் பாலசுப்பிரமணியன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'ஃபோர்மில்க் டயரியா' எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-03-26 15:27:52
news-image

இன்சுலின் செலுத்திக்கொள்வதால் பக்க விளைவு உண்டாகுமா?

2025-03-25 15:50:06
news-image

பிளஸன்டா அக்ரிடா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-03-22 16:55:55
news-image

பார்க்கின்சன் நோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2025-03-21 15:58:03
news-image

புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்துகிறதா உடற்பருமன்?

2025-03-20 14:09:44
news-image

உறக்கத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?

2025-03-19 15:46:23
news-image

மூல வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-03-18 17:35:54
news-image

வெப்ப அலையை எதிர்கொள்வது எப்படி?

2025-03-17 16:49:37
news-image

நியூமோகாக்கல் தடுப்பூசியை யார் செலுத்திக் கொள்ள...

2025-03-15 16:44:59
news-image

நுரையீரல் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2025-03-14 18:48:08
news-image

நிணநீர் நுண்ணறை வீக்க பாதிப்பிற்குரிய சிகிச்சை

2025-03-13 19:58:33
news-image

அன்கிலொக்லொஸியா எனும் நாக்கில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2025-03-12 15:11:15