திருமணம், கிரகப்பிரவேசம், காது குத்தல், சாமத்திய சடங்கு, திருமண நிச்சயதார்த்தம், சீமந்தம் அல்லது வளைகாப்பு, பெயர் சூட்டல், வணிக அலுவலகம் திறப்பு, விற்பனை நிலையம் திறப்பு, புனித யாத்திரை... என எம்முடைய வாழ்வில் எத்தனையோ சுப நிகழ்வுகள் நடைபெறும்.
இவை அனைத்தும் எந்தவித தடங்கலுமின்றி.. பரிபூரணமாக நிறைவேற, நாம் சுப நாளையும், சுப முகூர்த்த வேளையையும் நிர்ணயித்துக் கொள்வோம். இது தொடர்பாக குடும்ப ஜோதிடரிடம் ஆலோசித்து நல்ல தருணத்தை குறித்துக் கொள்வோம்.
இதுபோன்ற சுப நிகழ்வுகள் நடைபெறுவதற்கான சுப முகூர்த்த நாளையும், நேரத்தையும் சோதிடர்கள் துல்லியமாக அவதானிக்கும் போது, கசர யோகம் என்ற ஒரு விடயத்தை கவனத்தில் கொள்வர். கசர யோகத்தை அவதானித்து நேரத்தை குறிக்கவில்லை என்றால்..., அதனால் பல தடைகளும், தாமதங்களும், இழப்புகளும் ஏற்படக்கூடும்.
கசர யோகத்தை எப்படி நிர்ணயிப்பது..! முகூர்த்த நாளில் சூரியன் நிற்கும் நட்சத்திரத்திலிருந்து, சந்திரன் நிற்கும் நட்சத்திரம் வரை எண்ண வேண்டும். இந்த எண்ணிக்கை ஒன்பதுக்கு மேலிருந்தால் அதனை ஒன்பதால் வகுத்து மீதமுள்ள எண்ணிக்கை 3, 4, 5 ,9 ஆக இருந்தால் அது கசர யோகம். மீதம் வரும் எண்ணிக்கை 1, 2, 6, 7, 8 என இருந்தால் இது கசர யோகம் இல்லாத சுபயோக தருணம். இந்த தருணத்தில் தான் சுப நிகழ்வை மேற்கொள்ள வேண்டும்.
உதாரணமாக எடுத்துரைக்க வேண்டும் என்றால்.., முகூர்த்த நாளன்று சூரியன், பரணி நட்சத்திரத்தில் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். சந்திரன் உத்திர நட்சத்திரத்தில் இருக்கிறார் என்றால், பரணியிலிருந்து உத்திரம் நட்சத்திரம் வரை எண்ணினால்.., அது பரணிக்கு பதினோராவது நட்சத்திரமாக வரும். இதனை ஒன்பதால் வகுக்க மீதம் 2 என எண்ணிக்கை கிடைக்கும். இது கசரமில்லை. மேலும் சுப முகூர்த்தம் செய்ய ஏற்ற தருணமாகும்.
உடனே எம்மில் சிலர் சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து சந்திரன் நின்ற நட்சத்திரம், ஒன்பது என்ற எண்ணிக்கைக்குள் இருந்தால்...! எப்படி கசர யோகத்தை நிர்ணயிப்பது? என கேட்பர். சூரியன் நின்ற நட்சத்திரத்திலிருந்து சந்திரன் நின்ற நட்சத்திரம் வரை எண்ணி, அதனை ஒன்பது என்ற எண்ணிக்கைக்குள் வரும் மீதத்தை எண்ணி, எந்த எண்ணிக்கை குறைவாக வருகிறதோ.. அந்த எண்ணிக்கையை கசரமாக நிர்ணயிக்கலாம்.
சிலர் கசர யோகத்தை புறக்கணித்துவிட்டு சுப நிகழ்வு நடத்தினால்... என்ன விளைவுகள் ஏற்படும்? என சந்தேகத்துடன் கேட்பர் அல்லது மனதில் சந்தேகம் இருக்கும். இதனை துல்லியமாக அவதானிக்கவில்லை என்றால், மணப்பெண் அல்லது மணமகனுக்கு ஆயுள் குறைவு மற்றும் அமங்கலம் உண்டாகும்.
வேறு சில பெண்மணிகளுக்கு சீமந்த தருணத்தில் சிசு நாசம் ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு தம்பதிகளாக யாத்திரையை மேற்கொள்ளும் போது எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டு மரணத்தையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவெனில், இதற்கு பரிகாரம் இல்லை. எனவே திருமணம், சீமந்தம் போன்ற வாழ்வியல் பற்றுக்கோட்டிற்கான சுப நிகழ்வுகளை மேற்கொள்ளும் போது இந்த கசர யோகத்தை தவறாது கவனத்தில் கொள்ள வேண்டும்.
சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM